»   »  சாகசம் வெளியான சூட்டோடு புதிய படம் தொடங்கும் பிரஷாந்த்!

சாகசம் வெளியான சூட்டோடு புதிய படம் தொடங்கும் பிரஷாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தனது சாகசம் படத்தை இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிட்டார் நடிகர் பிரஷாந்த்.

அரங்குகளில் இந்தப் படம் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தனது அடுத்த புதிய படத்தை ஆரம்பிக்கிறார் பிரஷாந்த்.

Prashant starts his next after Sagasam

இந்தப் படம் இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் ஆகும். 2013-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை கடந்த ஆண்டே பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் வாங்கி வைத்திருந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் பிரஷாந்தை வைத்து தயாரிக்கிறார் தியாகராஜன். முன்னணி நடிகை நாயகியாக நடிக்க, தேவயானி, சிம்ரன் ஆகிய முன்னாள் நாயகிகள் சிறப்பு வேடங்களில் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள்.

மார்ச் மாதமே படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் தியாகராஜன். படத்தின் திரைக்கதை, வசனமும் அவரே. படத்தின் தலைப்பு இருபத்தியாறு என்பதை ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்!

English summary
Producer Thiagarajan is planning to start the remake of Special 26 with his son Prashant in the lead role.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil