»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித், விஜய், சூர்யா, மாதவன் போன்ற இளம் ஹீரோக்களிலேயே பிரசாந்த் தான் சீனியர். 10 வருடங்களாகநடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஜீனியர்கள் இவரைத் தாண்டி எங்கேயோ போய்விட்டார்கள். உலகஅழகிக்கு ஜோடியாக நடித்தாலும், பெரிய பேனர்களில் நடித்தாலும் கூட இவரால் இன்னும் திரையுலகில் சரியாககாலூன்ற முடியவில்லை.

ஆனால், இதை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் மிக ரிலாக்ஸ்டாகவே இருக்கிறார்.

10 வருடங்களுக்கு முன் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர்பிரசாந்த்.

மலையூர் மம்முட்டியான் படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் தியாகராஜனின் மகன்தான் பிரசாந்த். பிரசாந்த் நடித்தமுதல் படமே பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

சமீபத்தில் வெளியான பார்த்தேன் ரசித்தேன் 100 நாட்களைத் தாண்டி ஓடி இவரை முன்னணிக் கதாநாயகர்கள்வரிசையில் சேர்த்துவிட்டது.

இப்போது ஜோதிகாவுடன் ஸ்டார் படத்தில் ஜோடி சேர்கிறார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.படத்தை ரவிச்சந்திரன் இயக்குகிறார். ஏற்கனவே ரவிச்சந்திரன் இயக்கத்தில் கண்ணெதிரே தோன்றினாள் படத்தில்நடித்தவர் பிரசாந்த்.

பிரசாந்துடன் ஒரு பேட்டி:

கே: இன்று தமிழ் சினிமா உலகில் அஜித், விஜய் என்ற முன்னணி நடிகர்களுக்குத்தான் மவுசு உள்ளது.நீங்கள் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்தாலும் கூட அவர்கள் அளவுக்கு பேசப்படுவதில்லையே ஏன்?

ப: அஜித், விஜய் தவிர எல்லா ஹீரோக்களுமே இன்று வீட்டில் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள் என்று கூறவருகிறீர்கள் நீங்கள். இன்னிக்கு நிலைமைப்படி எல்லா ஹீரோக்களுமே பிஸி. எனக்கு மூச்சு விடக்கூடநேரமில்லை.

படம் நன்றாக இருந்தால் எல்லா ஆடியன்சுமே ரசித்துப் பார்ப்பார்கள். அவ்வளவுதான். ஒரு படத்தில் ஹீரோ நல்லாநடிச்சிருந்தும் கூட படம் நல்லா போகாது. ஏன்னா இன்றைய டிரன்ட் அப்படி. ஆடியன்ஸ் டேஸ்ட் மாறிக்கிட்டேவருது. நடிகர்கள் மத்தியில ஹெல்த்தி புராடெக்ட் கொடுக்கணும்ங்கற ஆரோக்கியமான போட்டி இருக்கு.

ஆனால் இந்தப் போட்டி தோழமையான போட்டி. இன்னிக்குள்ள நிலைமை என்னன்னா முடிந்த அளவு நாமநல்லா பண்ணணும். ரிசல்ட்ட ஜனங்ககிட்ட விட்டுடணும்ங்கறதுதான்.

கே: மற்ற நடிகர்கள் உங்கள ஓவர்டேக் பண்ணும் போது நீங்க பீல் பண்ண மாட்டீங்களா பிரசாந்த்?

ப: என்னை ஆரம்பகாலத்தில் நடிக்க வைத்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், உடன் நடித்த நடிகர்கள் எல்லோரும்இன்னும் என்னை மிக அன்போடு நடத்தி வருகிறார்கள். இதில் நான் நெகிழ்ந்து போகிறேன். மணிரத்தினம், பாலுமகேந்திரா, ஷங்கர் ஆகிய பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்தது என்னோட பெரிய அச்சீவ்மென்ட்.மத்தபடி ஓவர்டேக் விஷயமெல்லாம் என்ன அவ்வளவா பாதிச்சதில்ல.

கே: முதலில் உங்கள் அப்பா கதை கேட்பாரா? அல்லது நீங்களா?

ப: ஜீன்ஸ் படத்தில் நடிக்கும் வரை என் அப்பாதான் கதை கேட்டுக் கொண்டிருந்தார். அவர் விரும்பினால்மட்டுமே அந்தப் படத்தில் நடிக்கும் வழக்கம் இருந்தது. இப்போது நல்ல கதையுடன் வரும் இயக்குநர்களிடம்நானே கதை கேட்கிறேன்.

கே: உங்களோட பல படங்கள் நல்ல ஸ்டோரி இல்லாம பிளாப் ஆகியிருக்கிறதே?

ப: சில நேரங்கள்ல சில தயாரிப்பாளர்களுக்காக படங்கள்ல நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. உதாரணமா,அப்பாவோட நெருங்கிய நண்பர் ஒரு தயாரிப்பாளர். அவர் தனது கடன்களை உடனடியாக அடைக்க வேண்டும்என்பதால் ஒரு படத்தை எடுத்தார். அந்தப் படத்தில் நான் நடித்தேன். ஆனால் படம் பிளாப் ஆகி விட்டது. இதுயாருமே எதிர்பார்க்காதது. கடனை அடைக்க வேண்டுமே என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்ததால்கதையில் கவனம் செலுத்த மறந்து விட்டார். அதனால் படமும் பிளாப்.

கே: சினிமா உலகில் இன்னும் நிலையான இடத்திற்கு நீங்கள் வரவில்லையே ஏன்?

ப: பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள் கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை என்பது உண்மைதான்.வளர்ச்சி என்பது ஒரே நாளில் வந்து விடுவதல்ல. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வரும்.

ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் மட்டுமே நான் நடிப்பதில்லை. மேனரிசம், டயலாக் உச்சரிப்பது ஆகியவற்றை மாற்றிக்கொண்டேயிருப்பேன். அதனால் யாராலுமே நான் எப்படி நடிப்பேன் என்பதை சரியாகக் கணிக்க முடியாது.

வரும் ஆண்டுகளில் இன்னும் நன்றாக நடிக்க முயற்சிப்பேன்.

கே: நீங்கள் பொதுவாக மும்பை ஹீரோயின்களுடனேயே நடிக்கிறீர்கள். இப்போது ரிங்கி கன்னா,அமிஷா படேல் ஆகியோருடன் நடிக்கிறீர்கள். ஏற்கனவே, ஐஸ்வர்யா ராய், ரீமா சென்னுடன்நடித்தீர்கள். அது என்ன மும்பை ஹீரோயின்கள் மீது உங்களுக்கு தனி கிரேஸ்?

ப: எனது முதல் படத்தில் நடிகை காவேரி நடித்தார். அப்புறம் மம்தா குல்கர்னி, பிரீத்தி ஜிந்தா ஆகியோர் நடித்தனர்.தயாரிப்பாளர்கள் விரும்பும் ஹீரோயின்களுடன்தான் நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர்களுக்கு இதில் பெரியலாபம் உள்ளது. அவர்களால் எளிதில் ஹிந்தியிலும், தெலுங்கிலும் டப் செய்ய முடிகிறது. அதிக பணத்தையும் வசூல்செய்ய முடிகிறது. எனக்கும் பல மொழிகளில் நடிக்கும் அனுபவமும் கிடைக்கிறது.

கே: நீங்கள் திரைப்பட உலகில் நுழைந்த பிறகு உங்கள் அப்பா தியாகராஜன் நடிப்பதை நிறுத்தி விட்டார்.நீங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் திட்டம் ஏதாவது உண்டா?

ப: அவர் நடிப்பதை விட்டுவிட்டார். அப்பா இப்போது எனது எதிர்காலத்திலும், எனது நடிப்பிலும் மட்டுமேகவனம் செலுத்துகிறார். அவர் மீண்டும் படங்களில் நடித்து கஷ்டப்படுவதை நானும் விரும்பவில்லை. எங்களுக்குநல்லது செய்ய வேண்டும் என்பதற்காக வாழ்க்கையில் மிகவும் போராடியிருக்கிறார் எனது அப்பா என்றார் நடிகர்பிரசாந்த்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil