»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம், சூர்யா, அஜீத் வரிசையில் பிரசாந்த்தும் போலீஸ் வேடம் கட்டப் போகிறார்.

விக்ரமுக்கு சாமி, சூர்யாவுக்கு காக்க காக்க என காக்கிச் சட்டை வேடங்கள் வெற்றியைக் கொடுத்துள்ளன. அதேபோல, பிரசாந்த்தும் ஒரு காக்கிச்சட்டைப் படத்தில் நடித்து தனது தெறமையைக் காட்ட உள்ளார்.

இந்தியில் அமிதாப்பச்சன், அஜய் தேவ்கன், அக்ஷய்குமார், ஐஸ்வர்யா ராய், அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் காக்கி. இந்தப் படத்தைத்தான் தமிழில் ரீ மேக் செய்யவுள்ளார்கள்.

படத்தின் கதை ரொம்பவும் சிம்பிள். ஒரு தீவிரவாதியை ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். வழியில் அந்ததீவிரவாதியை மீட்க அவனது சகாக்கள் முயற்சிப்பதும், அவர்களை போலீஸார் எப்படி சமாளிக்கின்றனர் என்பதும்தான் கதை.

படத்தில் அக்ஷய்குமார் என்ற வேடத்தில்தான் பிரசாந்த் நடிக்கவுள்ளார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் லாரா தத்தாவை ஒருபாடலுக்கு ஆட வைக்கவுள்ளார்கள். அப்பா தியாகராஜனே படத்தைத் தயாரித்து, இயக்கவும் உள்ளார்.

இந்தப் படத்தில் நடிப்பதற்காக உடம்புக்கு முறுக்கேற்றும் வேலையில் பிரசாந்த் தீவிரமாகியுள்ளார். இதுதவிர மும்பையில் உள்ள போலீஸ்அகாடமிக்கும் சென்று சிறப்பு பயிற்சி பெறவுள்ளார். மேலும் வெளிநாட்டுக்கும் சென்று உளவுப் பிரிவு போலீஸாரின் பணிகளைப் பார்வையிட்டு சிறப்பு பயிற்சிபெறவுள்ளாராம்.

ஷாக் படம் கொடுத்த எதிர்பாராத வெற்றியினால் மகிழ்ந்துள்ள தியாகராஜன், போலீஸ் படத்தையும் தானே இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படம்பிரசாந்த்திற்கு பெரும் திருப்பத்தைக் கொடுக்கும் என அப்பா நம்புகிறார்.

காக்கி படத்தில் வெயிட்டான ரோல்கள் என்றால் அது அமிதாப்பும், அஜய் தேவ்கனும் நடித்த ரோல்கள்தான். இரண்டு ரோல்களையும் செய்யபொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்வதில் தியாகராஜன் விழி பிதுங்கிப் போயுள்ளார்.

அமிதாப் இந்தியில் நடித்த வேடத்தை தமிழிலும் செய்யக் கேட்டிருக்கிறார்கள். அவர் ஒத்துக் கொள்வாரா என்பதுதான் தெரியவில்லை. அமிதாப்வரவில்லையென்றால் தானே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் தியாகராஜன்.

தியாகராஜனின் நடிப்பாற்றல் தமிழகத்தில் எல்லாருக்கும் தெரியும். என-வே அமிதாப்தான் பெரிய மனது வைத்து அந்தக் கேரக்டரைக் காப்பாற்றவேண்டும்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil