»   »  நானா மாட்டேங்கிறேன், சிக்க மாட்டேங்கிறா சார்: பிரேம்ஜி அமரன்

நானா மாட்டேங்கிறேன், சிக்க மாட்டேங்கிறா சார்: பிரேம்ஜி அமரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு ஏற்ற பெண்ணுக்காக காத்திருப்பதாக நடிகர் பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன் தனது அண்ணன் வெங்கட் பிரபுவின் படங்களில் ஹீரோக்களுக்கு நிகரான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

37 வயதாகும் பிரேம்ஜிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

திருமணம்

திருமணம்

பிரேம்ஜியை பார்ப்பவர்கள் எல்லாம் உங்களுக்கு எப்போ சார் திருமணம் என்று தான் கேட்கிறார்கள். திரையுலகினர் மட்டும் அல்ல பத்திரிகையாளர்களும் அவரை அதே கேள்வியை தான் கேட்கிறார்கள்.

காத்திருப்பு

காத்திருப்பு

நான் எங்க போனாலும் என் கல்யாணத்தை பத்தி தான் கேட்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கேற்ற பெண்ணை நான் இன்னும் பார்க்கவில்லை என்கிறார் பிரேம்ஜி.

தமிழ் பொண்ணு

தமிழ் பொண்ணு

எந்த மாதிரி பொண்ணை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டதர்கு பிரேம்ஜி கூறுகையில், தமிழ் கலாச்சாரத்தை பின்பற்றும் நல்ல தமிழ் பொண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன். நான் அப்படிப்பட்ட பெண்ணை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றார்.

நிச்சயமாக

நிச்சயமாக

நான் எதிர்பார்க்கும்படியான பெண் கிடைத்தவுடன் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன் என்று பிரேம்ஜி அமரன் தெரிவித்துள்ளார். பிரேம்ஜி தற்போது டக்கர், சிம்பா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor cum music composer Premgi Amaren said that he is still waiting for Miss Right to get settled.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil