எங்களுக்கு மட்டும் கல்யாணமே ஆகாது...சிம்புவையும் சேர்த்து கலாய்த்த பிரேம்ஜி

சென்னை : இதுவரை கல்யாண விஷயத்தில் தனக்கு தானே மீம்ஸ் போட்டு தான் கலாய்த்து வந்தார் பிரேம்ஜி. தற்போது சிம்புவையும் சேர்த்து கலாய்த்துள்ளார். இதை வைத்தும் பிரேம்ஜியை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டவர் பிரேம்ஜி. பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி, பல படங்களில் நடித்துள்ளார். லேட்டஸ்டாக சிம்பு நடித்த மாநாடு படத்தில் அவரின் நண்பராக நடித்திருந்தார். தற்போது தமிழ் ராக்கர்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.

43 வயதாகும் பிரேம்ஜி தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கு திருமணத்தில் விருப்பமில்லை என பிரேம்ஜி கூறி வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு, பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கங்கை அமரன் அறிவித்தார். பெண் பார்த்து, முடிவு செய்துவிட்டதாகவும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றார்கள். பிறகு அது பற்றி ஏதும் வெளியிடப்படவில்லை.

பிரேம்ஜி காதலிக்கிறாரா

பிரேம்ஜி காதலிக்கிறாரா

ஆனால் அதற்கு பிறகு, இவன் மட்டும் நிம்மதியா இருக்கான் என அவரது சகோதரர் வெங்கட் பிரபு சோஷியல் மீடியாவில் பதிவிட்டார். அதற்கு பிறகு இனி கல்யாணமே கிடையாது என்று சோஷியல் மீடியாவில் சொன்னார் பிரேம்ஜி. இதற்கிடையில் பாடகி ஒருவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் வதந்தி வேறு பரவியது.

இவருக்கு கல்யாணம் பண்ணி வைங்க

இவருக்கு கல்யாணம் பண்ணி வைங்க

பிரேம்ஜியின் திருமணம் விவகாரம் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருந்தாலும், நடிகைகள் பலரின் பதிவுகளுக்கும் விடாமல் பிரேம்ஜி செய்து வரும் கமெண்ட்டுகள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதோடு மட்டுமின்றி சமீப காலமாக தனக்கு தானே மீம்ஸ் போட்டு கலாய்த்து, சோஷியல் மீடியா ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் கவர்ந்து வருகிறார். சமீபத்தில், பிரேம்ஜி பதிவிட்ட மீம்சில், இவருக்கு முதலில் கல்யாணம் பண்ணி வைங்கப்பா எல்லா பொண்ணு போஸ்ட்டுக்கும் ஹார்ட் விடுறான் என குறிப்பிடப்பட்டிருந்தது.

சிம்புவிற்கும் கல்யாணம் ஆகாதா

சிம்புவிற்கும் கல்யாணம் ஆகாதா

இந்நிலையில் இன்று அவர் பதிவிட்டுள்ள மீம்சில், இன்னும் 5 வருடம் கழித்து அனைவருக்கும் திருமணமாகி இருக்கும், என்னையும் சிம்புவையும் தவிர என குறிப்பிட்டுள்ளார். இதை வைத்தும் பிரேம்ஜியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இந்த லீஸ்டில் த்ரிஷாவை விட்டுடீங்களே தலைவா.எல்லாம் இருந்தும் கல்யாணம் பண்ணலனா பொண்ணு கிடைக்காமலாம் இல்லை. திமிர். சும்மா மீம்ஸ் போட்டு சீன் கிரியேட் பண்ணாதீங்க பிரேம் ப்ரோ. இன்று முதல் சிங்கிள் என்று சொல்லும் அங்கிள் என்று எல்லாராலும் அன்பாக அழைக்கப்படுவாய்.

உங்க கூட சேர்ந்தா எப்படி நடக்கும்

உங்க கூட சேர்ந்தா எப்படி நடக்கும்

சிம்பு கூட நீங்க இருக்க வரைக்கும் அவருக்கு எப்படிய்யா கல்யாணம் ஆகும். . இன்னும் 5 வருஷத்துல உங்க ஃபிரண்டோட பையனுக்கே கல்யாணம் ஆகிருக்கும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ஸ்டிரைட்டா 60 ம் கல்யாணம் தான்.விடு தலைவா இதுக்கெல்லாம் கவலை படக்கூடாது. நமக்கு நாமேனு வாழ்ந்துட்டு போயிரனும். விஷால விட்டுட்டீங்களே. என்ன கொடுமை பிரேம்ஜி இது. எவ்வளவோ பண்றிங்க இதை பண்ணமாட்டிங்களா. யோவ்...உன்னோட எங்க அண்ணன் சிலம்பரசன சேக்காத. ஏன்னா நீ ஒரு கலர் பேண்ட் சட்ட போட்ட சாமியார் என பல விதமாக கமெண்ட் செய்து, கிண்டல் அடித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X