»   »  ஜெய் ஒரு வரப்பிரசாதம்... ‘புகழ்’ பாடும் தயாரிப்பாளர் சுஷாந்த்!

ஜெய் ஒரு வரப்பிரசாதம்... ‘புகழ்’ பாடும் தயாரிப்பாளர் சுஷாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர்களுக்கு ஜெய் ஒரு வரப்பிரசாதம் என புகழ் பட தயாரிப்பாளர் சுஷாந்த் பிரசாத் பாராட்டியுள்ளார்.

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதனைத் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணிய புரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, வடகறி ஆகிய வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் தற்போது வலியவன், புகழ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

புகழ் படத்தை பிலிம் டிபார்ட்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் சுஷாந்த் பிரசாத் தயாரிக்கிறார். இவர் தனது பட நாயகன் ஜெய் குறித்து கூறியதாவது:

வரப்பிரசாதம்...

வரப்பிரசாதம்...

ஜெய்யுடன் பணியாற்றுவது மிகவும் உற்சாகமானது. அவருடைய நல்ல கதைக்கான தேடல், நேரத்தை கடைபிடிக்கும் பாங்கு, எளிமை ஆகியவை மிகவும் முக்கியமான குணங்களாகும். அவர் தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

இது ரெண்டாவது படம்...

இது ரெண்டாவது படம்...

'வடகறி' படத்தை தொடர்ந்து நாங்கள் அவரோடு இணைவது இது இரண்டாவது படமாகும். வணிக ரீதியாக பெரும் வெற்றிப் பெற்ற 'வடகறி' நகைச்சுவைக் கலந்த ஒரு திரில்லர் படமாகும்.

புகழ் பெரும்...

புகழ் பெரும்...

'புகழ்' பெயருக்கேற்ப பெரும் படமாகும். என்.எச்.4 படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும்.

பெருமிதம்...

பெருமிதம்...

இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டு புகழ் பெற நாங்கள் எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். ரெடியன்ஸ் மீடியா வருண் மணியனோடு இணைந்து இந்த படத்தை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்'' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Pugal producer Susanth has praised actor Jai for his performance in the movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil