»   »  இந்த பத்திரிகையாளர்களுக்கு அறிவே இல்லை: பாலிவுட் ஹீரோ பாய்ச்சல்

இந்த பத்திரிகையாளர்களுக்கு அறிவே இல்லை: பாலிவுட் ஹீரோ பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது குழந்தையின் கண்களுக்கு அருகே கேமராவை பயன்படுத்திய பத்திரிகையாளர்கள் மீது பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் கோபம் அடைந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரின் நான்கரை மாத மகளுக்கு மிஷா என்று பெயர் வைத்துள்ளார். மகள் தான் தனது உலகம் என்று கூறி வருகிறார் ஷாஹித். மகளுடன் நேரம் செலவிடுவதை இன்பமாக கருதுகிறார்.

இந்நிலையில் கைக்குழந்தையான அவரது செல்ல மகளை பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.

கோபம்

கோபம்

பத்திரிகையாளர்கள் தனது மகளை புகைப்படம் எடுக்க முயன்றது ஷாஹிதை கோபம் அடைய வைத்துள்ளது. ஷாஹித் இதுவரை தனது மகளின் முகம் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிடவில்லை.

ஷாஹித்

பச்சிளம் குழந்தையின் கண்களுக்கு இரண்டு அடி தாரத்தில் 20 கேமராக்களை பிளாஷை செய்வது அதன் கண்களுக்கு ஆபத்தானது என்பதை சில பத்திரிகையாளர்கள் உணராதது துரதிர்ஷ்டவசமானது. அவர்களுக்கு புத்தி இல்லை என ஷாஹித் ட்வீட்டியுள்ளார்.

தூக்கம்

தூக்கம்

படங்களில் நடித்துக் கொண்டு குழந்தையையும் கவனித்துக் கொள்வது சவாலாக உள்ளது. மிஷாவை பார்த்துக் கொள்வதால் இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை என்கிறார் ஷாஹித்.

படங்கள்

படங்கள்

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஹாஹித் கபூர், கங்கனா ரனாவத், சயிஃப் அலி கான் நடித்துள்ள ரங்கூன் படம் அடுத்த மாதம் 24ம் தேதி ரிலீஸாகிறது. ஷாஹித் சஞ்சய் லீலா பன்சாலியின் பத்மாவதி படத்தல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

English summary
Every single time Shahid Kapoor steps out with his lovely wife Mira Rajput or baby girl Misha Kapoor, the shutterbugs go berserk to capture the trio. However, it seems this act of media has irked daddy Shahid Kapoor and out of anger, a few minutes ago, Shahid posted a tweet regarding the same!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil