உங்களுக்கு ஒன்னுன்னா மோடியா வந்து நிப்பாரு.. ரஜினியிடம் ராதாரவி அதிரடி.. ஆத்தாடி வேற மாதிரி சம்பவம்

சென்னை: ரஜினி இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு பிறகு அவர் கமலுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனை அவர்கள் இரண்டு பேருமே கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டார்கள். இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். ஒருவேளை அது நடந்தால் 40 வருடங்களுக்கு பிறகு அவர்கள் இணைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி பட விழாவில் ரஜினி பேசியபோது, 'நான் யானை இல்லை குதிரை. விழுந்தால் டக்குனு எழுந்திடுவேன்' என்று கூறியிருப்பார். அதன்படிதான் அவர் தனது சொந்த வாழ்க்கையையும் வடிவமைத்திருக்கிறார். ஜெயிலர் படத்துக்கு முன்னர் அவர் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. எனவே இனி ரஜினி அவ்வளவுதான் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் ஜெயிலர் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்தார்.

ஜெயிலர் 2: கடைசியாக அவர் நடித்த கூலி படமும் தோல்விதான். அதனால் வழக்கம்போல் அவரை பற்றி என்னென்னம்மோ பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அவர் நடித்துவரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் மீண்டுவிடுவார் என்று அவரின் ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட அவர்; இப்போது இமயமலையில் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார்.

Radha Ravi recalls the incident when he spoke to Rajinikanth about Modi
Photo Credit:

கமலுடன் கூட்டணி: இது ஒருபக்கம் இருக்க கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இரண்டு பேருமே 90 சதவீதம் அந்த தகவலை உறுதி செய்தார்கள். இன்னும் யார் அந்தப் படத்தை இயக்கப்போகிறார் என்பது முடிவாகவில்லை. யார் இயக்கினாலும் பரவாயில்லை லோகேஷ் கனகராஜ் மட்டும் வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. ஏனெனில் கூலி கொடுத்த ரிசல்ட் அப்படி.

வலதுசாரி ரஜினி?: இதற்கிடையே ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்தவரை அவர் தீவிரமான வலதுசாரி என்ற பேச்சு உண்டு. அவரது செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கும். ஆனால் அதையெல்லாம் நினைத்து அவர் பெரும்பாலும் கவலைப்படவில்லை. அரசியலுக்கு வந்தால் ஆன்மீக அரசியலாக இருக்கும் என்றெல்லாம் கூறி குண்டை போட்டவர் அவர். நல்வாய்ப்பாக அவர் அரசியலில் அடியெடுத்து வைக்கவில்லை.

ராதாரவி பேட்டி: அதேபோல் சில முறை உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவரும் ரஜினி. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோது நடந்த நிகழ்வை ராதாரவி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். சித்ரா லட்சுமணனிடம் அவர் கொடுத்த பேட்டியில், "ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நேரில் சென்று விசாரிக்கலாம் என்று முடிவெடுத்து ஃபோன் செய்தேன். அவரது உதவியாளர் சுப்பையா ஃபோன் எடுத்து, எதற்காக சந்திக்க வேண்டும் என்று கேட்டார். இல்லை மூன்று ஏக்கர் நிலம் வாங்கி தர சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு, நான் வரவே இல்லை என சொல்லி ஃபோனை வைத்துவிட்டேன்.

மோடியா வந்து நிற்பார்: அவர் மருத்துவமனையில் இருந்தபோது என்னை, சரத்குமாரை, விஜயகாந்த்தை எல்லாம் உள்ளேயே விடவில்லை. ஆனால் குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை உள்ளே விட்டார்கள். பிறகு அவரது பிறந்தநாள் ஒருமுறை 12.12.12ல் வந்தது. அது 100 வருடத்துக்கு ஒருமுறை வரும். அந்த சமயத்தில் அவருக்கு ஒரு விழா எடுத்தோம். அப்போது நான் அவரிடமே, 'ரஜினி சார் உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது எங்களை எல்லாம் உங்களை பார்க்க விடவில்லை. ஆனால் மோடியை உள்ளே விட்டார்கள். உங்களுக்கு ஏதோ ஒன்று நடந்தால் முதலில் நாங்கள்தான் வந்து நிற்போம். மோடியா வருவார் என்று கேட்டுவிட்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X