twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபீஸ் கட்டும் பணத்தில் சொந்த பள்ளிக்கூடம் கட்டும் ராகவா லாரன்ஸ்!

    By Shankar
    |

    ஆதரவற்ற குழந்தைகளை வெவ்வேறு பள்ளிகளில் படிக்க வைத்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ், இப்போது சொந்தமாக ஒரு பள்ளிக் கூடத்தைக் கட்ட ஆரம்பித்துள்ளார்.

    ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது டிரஸ்ட் மூலம் 60 குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

    Raghava Lawrence constructs own school

    தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் இப்போது சொந்தமாக பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு ப்ரிகேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்துள்ளார்.

    பிற்காலத்தில இந்தப் பள்ளியை பிளஸ்- 2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியைக் கட்டும் பணி நேற்று தொடங்கியது.

    இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறுகையில், "ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.. பீஸ் கட்டுகிற பணத்தில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது. எனவே இந்தப் பள்ளியைக் கட்டுகிறேன். நான்தான் சரியாக படிக்கல... படிக்க வேண்டும் என்று நினைக்கும் ஏழை மாணவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்," என்றார்.

    English summary
    Actor - Director Raghava Lawrence has started the construction of his own school building for poor students.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X