»   »  பாகுபலி பிரபாஸின் பர்த்டேவுக்கு முந்தை நாளே பரிசு கொடுக்கும் ராஜமவுலி

பாகுபலி பிரபாஸின் பர்த்டேவுக்கு முந்தை நாளே பரிசு கொடுக்கும் ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 22ம் தேதி வெளியிடப்படும் என இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி படம் வசூலில் சக்கை போடு போட்டது. உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது பாகுபலி.

Rajamouli announces Baahubali 2 first look details

இந்நிலையில் தான் ராஜமவுலி பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றி ராஜமவுலி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 22ம் தேதி அதாவது பிரபாஸின் பிறந்தநாளுக்கு முந்தைய நாள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

English summary
SS Rajamouli tweeted that, 'First look of Baahubali 2 the conclusion will be out on 22nd oct, a day before Prabhas' birthday #WKKB'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil