»   »  தெலுங்கில் கிரீடம்

தெலுங்கில் கிரீடம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மோகன்லால் நடிக்க மலையாளம் மற்றும் அஜீத் நடிக்க தமிழில் வெளியான கிரீடம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார் டாக்டர் ராஜசேகர்.

தென்னிந்திய சினிமாவில் பல ரீமேக் ஸ்பெஷலிஸ்ட்டுகள் உள்ளனர். தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் ரீமேக் கிங் ஆகவுள்ளார். இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் ரீமேக் தான்.

இந் நிலையில் அஜீத் நடித்த கிரீடம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளார் ராஜசேகர்.

கிரீடம் முதலில் மலையாளத்தில் மோகன்லால் நடிக்க உருவானது. 20 வருடங்களுக்கு முன்பு வந்த இப்படம் சமீபத்தில் அஜீத், திரிஷா நடிப்பில் ரீமேக் ஆனது.

ஆரம்பத்தில் ரசிகர்களின் அதிருப்தியைப் பெற்ற இப்படம், தற்போது மாற்றப்பட்ட கிளைமாக்ஸுடன் ஓடிக் கொண்டுள்ளது.

இந் நிலையில் கிரீடம் படத்தின் ஒரிஜினல் தயாரிப்பாளரை அணுகி அதற்கான உரிமையை வாங்கியுள்ளார் ராஜசேகர்.

இப்படத்தின் உரிமையை வாங்க பல தெலுங்குத் தயாரிப்பாளர்களும் முயன்றனர். ஆனால் ராஜசேகருக்கே வெற்றி கிடைத்துள்ளது.

தெலுங்கு ரசிகர்களின் விருப்பத்திற்கேற்பவும், தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும் படத்தை மாற்றியமைக்கப் போவதாக கூறியுள்ளார் ராஜசேகர்.

இப்படத்தை ராஜசேகரின் மனைவியான முன்னாள் நடிகை ஜீவிதாவே இயக்குவார் என்று தெரிகிறது.

தற்போது ராஜசேகர் ஹீரோவாக நடிக்க சம்விருத்தா, முமைத் கான் ஜோடி போட்டு தெலுங்கில் உருவான படத்தை தமிழில் உடம்பு எப்படி இருக்கு? என்ற பெயரில் ரிலீஸ் செய்யும் வேலைகளில் பிஸியாக உள்ளார் ஜீவிதா.

இதை முடித்து விட்டு ராஜகேசருக்கு கிரீடம் அணிவிக்கிறாராம் ஜீவிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil