»   »  சத்யா மூவிஸ் படத்தில் ரஜினி?

சத்யா மூவிஸ் படத்தில் ரஜினி?

Subscribe to Oneindia Tamil

சிவாஜிக்குப் பிறகு சத்யா மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

சிவாஜி படப்பிடிப்பு முடிந்து விட்டது. பாடல்கள் வெளியீட்டுக்குத் தயாராகி விட்டன. இதையடுத்து ரஜினியின் அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் தொடங்கி விட்டன.

சிவாஜிக்குப் பிறகு சத்யா மூவிஸ் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நிறுவனமான சத்யா மூவிஸ் இதற்கு முன்பு ரஜியை வைத்து பணக்காரன், பாட்ஷா ஆகிய படங்களை தயாரித்துள்ளது.

இதில் பாட்ஷா மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படம். மேலும் இந்தப் படத்தின் வெற்றி விழாவின்போதுதான் ரஜினி வெடிகுண்டுக் கலாச்சாரம் பற்றிப் பேசப் போக அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையே பூசல் உருவானது.

இதைத் தொடர்ந்து சத்யா மூவிஸ் படத்தில் ரஜினி நடிக்கவில்லை. இந்த நிலையில் சத்யா மூவிஸுக்காக ரஜினி அடுத்த படம் செய்து தரப் போகிறார் என்று கோலிவுட்டில் பேச்சு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக சத்யா மூவிஸ் நிறுவனத்தினர் ரஜினியுடன் பேசி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

சத்யா மூவிஸோடு சேர்ந்து பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனத்தை இணை தயாரிப்பாளராக சேர்க்கலாம் என ரஜினி ஆலோசனை கூறியுள்ளாராம். இைத சத்யா மூவிஸ் ஏற்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தை ரமணா, கஜினி, ஸ்டாலின் ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கக் கூடும் என்று தெரிகிறது. ஏற்கனவே முருகதாஸுடன் ரஜினி இதுகுறித்துப் பேசி விட்டாராம். முருகதாஸும் இதை சில நாட்களுக்கு முன்புதான் உறுதிப்படுத்தினார்.

இதே போல பழம்பெரும் தயாரிப்பாளரும், ரஜினியை வைத்து பல படங்களைத் தயாரித்து ரஜினியை அடையாளம் காட்டியவர்களில் ஒருவருமான பஞ்சு அருணாச்சலமும் தனக்காக ஒரு படம் நடித்துக் கொடுக்குமாறு ரஜினியை அணுகியுள்ளதாக தெரிகிறது.

பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் வெளியான ஆறிலிருந்து அறுபுது வரை படம் ரஜினிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து பஞ்சுவிடம் கேட்டபோது, ரஜினியிம் ஒருமுைற பேசினேன். அவரிடமிருந்து உறுதியான பதில் வரவில்லை. இருப்பினும் எனது கோரிக்கையை அவர் பரிசீலித்து வருவதாக அறிகிறேன் என்றார்.

சிவாஜிக்கு முன்பாக எடிட்டர் மோகமன், கலைப்புலி தாணு உள்ளிட்டோரும் ரஜினியை வைத்துப் படம் எடுக்க அணுகினர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் ரஜினி ஏவி.எம். நிறுவனத்ைத தேர்வு ெசய்து சிவாஜியைத் தொடங்கி விட்டார்.

சத்யா மூவிஸ் தயாரிப்பில் ரஜினி நடிப்பது உறுதியானால் பாட்ஷாவை விட மிகச் சிறந்த படைப்பாக அதை உருவாக்க சத்யா மூவிஸ் திட்டமிட்டுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil