»   »  சிவாஜி பட டோக்கன் வேணுமா?

சிவாஜி பட டோக்கன் வேணுமா?

Subscribe to Oneindia Tamil

ரஜினி திருவிழா நெருங்கி விட்டது. விருந்தை சுவைக்க ரசிகர்கள் ரெடியாகி வருகிறார்கள்.

ரஜினி படம் வருகிறது என்றால் அது ரசிகர்களுக்கு மட்டுமல்ல, திரையுலகினருக்கும் திருவிழா போல. பட பூஜை முதல் ரிலீஸ் வரை கடும் பரபரப்பாக இருக்கும் ரஜினி நடிக்கும் படங்கள். அதே பரபரப்போடு தற்போது சிவாஜி படமும் வளர்ந்து, ரிலீஸுக்குத் தயாராகி விட்டது.

படத்தைக் கண்டு களிக்க வசதியாக ரசிகர்களுக்கு டோக்கன் கொடுக்கும் பணியில் ரஜினி ரசிகர் மன்றங்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த மாதம் 31ம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படவுள்ளதாம். அந்தந்தப் பகுதி ரஜினி ரசிகர் மன்றத் தலைவரின் கடிதத்துடன் வரும் ரசிகர்களுக்கு இந்த டோக்கன்கள் வழங்கப்படவுள்ளது. இதுதொடர்பாக ரஜினி ரசிகர் தலைமை மன்றம் கடந்த வாரமே அறிவிப்பு வெளியிட்டு விட்டதாம்.

ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு டோக்கன்தான் வழங்கப்படும். ஒரு டோக்கனின் விலை ரூ. 1600. சிவாஜி படம் ரிலீஸாகும் நாளில் தியேட்டருக்கு இந்த டோக்கனுடன் சென்று டிக்கெட் கவுண்டரில் காட்டினால் டோக்கனைப் பெற்றுக் கொண்டு டிக்கெட் தருவார்களாம்.

ஒரு டோக்கனுக்கு 20 டிக்கெட்டுகளாம். இவற்றை ஒரே நாளில் பயன்படுத்திப் படம் பார்க்க முடியாது. ஒரு நாளைக்கு 4 டிக்கெட்டுகளை மட்டுமே பயன்படுத்தலாம். ஒவ்வொரு டிக்கெட்டின் மதிப்பு ரூ. 50.

இந்த டிக்கெட்டுக்கான விலை போக மீதம் உள்ள 600 ரூபாய் ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்தந்த மன்றத்திற்குத் திருப்பித் தரப்படுமாம்.

டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளால் அவற்றை வாங்க சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ரஜினிக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் அந்தப் பகுதியே திருவிழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.

ஒவ்வொருவருக்கும் ஒரு டோக்கன்தான் என்று கூறப்பட்டாலும், அனைவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட டோக்கன்களைப் பெற பகீரதப் பிரயத்தனம் செய்து வருகின்றனர்.மேலும் 1600 ரூபாய் கொடுத்து டோக்கன் வாங்குவதையும் ரசிகர்கள் பெரிதாத நினைக்கவில்லை.

தலைவர் படத்திற்கு இெதல்லாம் ஜூஜூபி தொைக. இதை விட கூடுதலாக வசூலித்தாலும் கொடுக்க நாங்க ரெடி என்கின்றனர் உற்சாகமாக.

ரசிகர்கள் மட்டுமல்லாது கல்யாண மண்டபம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்களும் டோக்கனை வாங்க ரசிகர்கள் மூலம் முயற்சிப்பதையும் காண முடிந்தது.

அதிக விலை கொடுத்தாவது இந்த டோக்கனை வாங்க அவர்கள் தயாராக உள்ளனர் (அதை அப்படியே சூப்பர் விலைக்கு விற்று விடலாமே).

இதற்கிடையே சிவாஜியை, தமிழகம் முழுவதும் 300 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

சென்னையில் உள்ள மாயாஜால் தியேட்டர் வளாகத்தில் உள்ள 6 தியேட்டர்களிலும் சிவாஜியைப் போட்டுக் கலக்கப் போகிறார்களாம். அதேபோல ஐநாக்ஸ் மல்டிப்பிளக்ஸ் வளாகத்தில் உள்ள 4 தியேட்டர்களிலும் சிவாஜி திரையிடப்படவுள்ளதாம்.

சிவாஜி கவுண்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil