»   »  துப்பித் துப்பி அடிக்கும் ரஜினி!

துப்பித் துப்பி அடிக்கும் ரஜினி!

Subscribe to Oneindia Tamil

ரஜினி படம் என்றாலே காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. அதற்கு சிவாஜியும் விதி விலக்கல்ல. இதிலும் கலக்கலான காமெடிக் காட்சிளும், காமெடி கலந்த சண்டைக் காட்சிகளும் எக்கச்சக்கமாக இருக்கிறதாம்.

தமிழக மக்கள் கோடை விடுமுறையைக் கோலாகலமாக கொண்டாட சிவாஜி சீக்கிரமாக வருகிறது. பாடல்களை முதலில் விட்டு பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் சிவாஜி யூனிட், அடுத்து படத்தை நிறைவு செய்யும் கடைசிக் கட்ட நகாசு வேலைகளில் சீரியஸாக இறங்கியுள்ளது.

தம்பிக்கு எந்த ஊரு படத்திலிருந்து ரஜினி தனது படங்களில் காமெடிக் காட்சிகளை அதிகரித்து விட்டார். அதன் மூலம் சிறுவர்களையும், குழந்தைகளையும் அவர் ஈர்க்க ஆரம்பித்தார். அவரது காமெடி குழந்தைகளை வெகுவாகக் கவர்ந்து விடவே, அவரது படங்களில் குழந்தைகைளக் கவரும் வகையிலான காமெடிக் காட்சிகள் கண்டிப்பாக இடம் பெற்று வருகின்றன.

சிவாஜியிலும் குழந்தைகளைக் குறி வைத்து பல காட்சிகளை கிராபிக்ஸ் முறையில் சேர்க்கவுள்ளனராம். அந்த வேலைதான் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினியின் சண்டைக் காட்சிகளை படு கலர்புல்லாக மாற்றி வருகிறது ஒரு கிராபிக்ஸ் நிபுணர் குழு. வழக்கமான விண்ணில் பர்ந்து பர்ந்து ரஜினி அடிப்பது போன்ற காட்சிகள் இதிலும் இடம் பெறுகிறது. ஆனால் இதில் சில வித்தியாசங்களை காட்டவுள்ளனராம்.

அதேபோல, சூயிங்கம்மை வாயில் போட்டபடி ஸ்டைலாக வரும் ரஜினி, அதை முட்டை விட்டு வில்லன்களின் முகத்தில் துப்பித் துப்பி அடிக்கும் காட்சியும் இடம் பெறுகிறதாம். இந்தக் காட்சி குழந்தைகளை கவரும் வகையில் காமெடியாக வடிவமைக்கவுள்ளனராம்.

இப்படி சண்டைக் காட்சிகளில் சின்னச் சின்ன சுவாரஸ்யங்களை பார்த்துப் பார்த்து சேர்த்துக் கொண்டிருக்கிறார் ஷங்கர். அடுத்த கட்டமாக படத்திற்கான பின்னணி இசையை முடிக்க ஏ.ஆர்.ரஹ்மானும், ஷங்கரும் லண்டனுக்குப் பறக்கிறார்கள்.

அங்கு வைத்துத்தான் படத்துக்கான பின்னணி இசையை உருவாக்கப் போகிறாராம் ரஹ்மான். சென்னையிலும் சில காட்சிகளுக்கு ரீ ரிக்கார்டிங் செய்யவுள்ளார் ரஹ்மான்.

கடைசிக் கட்ட நகாசு வேலைகளை முடித்து விட்டு படத்திற்கு இறுதி வடிவம் கொடுத்த பின்னர் ரஜினி, ஷங்கர், ஏவி.எம். சரவணன் ஆகியோர் அமர்ந்து படத்தை முழுசாக பார்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன் பின்னரே படத்தை சென்சாருக்கு அனுப்புவார்களாம்.

வாஜி, வாஜி!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil