»   »  ரஜினியின் இங்கிலீஷ் சம்மர்!

ரஜினியின் இங்கிலீஷ் சம்மர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் பாப்புலாரிட்டியை அறிந்து இங்கிலாந்திலிருந்து ஒரு குழுவினர் சென்னைக்கு வந்து ரஜினி குறித்த டாக்குமென்டரிப் படத்தைத் தயாரித்து வருகிறார்கள்.

சிவாஜி அடுத்த மாதம் ரிலீஸாகப் போகிறது. ஓப்பனிங் ஷோவிலேயே தலைவரை தரிசித்து விட தமிழகமெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் ஆரவாரமாக தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில், இங்கிலாந்து மாணவர் குழு ஒன்று ரஜினியை பற்றி டாக்குமெண்டரி படம் தயாரிக்க சென்னை வந்துள்ளனர். லண்டன் பல்கலைகழகத்தில் பி.ஏ படிக்கும் எல்லி, மேக்ஸ், ராப் ஆகிய மாணவ, மாணவியருடன், இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயந்தி என்ற மாணவியும் இந்த டீமுடன் கோடம்பாக்கத்தில் கேம்ப் அடித்துள்ளார்.

தாங்கள் தயாரிக்க போகும் டாக்குமெண்ட்ரி குறித்து அவர்கள் கூறுகையில்,

ரஜினி ரசிகர்கள் அவரை தெய்வமாக மதிக்கின்றனர். இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் ரஜினியை நிறைய பாராட்டுகின்றனர். அவருடைய ஸ்டைல் மாதிரி அங்குள்ள குழந்தைகள் நடித்துக் காட்டுவார்கள்.

அவருடைய நடிப்பு எங்களையும் கவர்ந்தது. அவர் எங்கிருக்கிறார் என கேட்டபோது தமிழ்நாட்டில் வசிப்பதாக கூறியதால், அவரை பற்றி டாக்குமெண்ட்ரி எடுக்க சென்னை வந்தோம்.

சென்னையில் சில நாட்களாக தங்கி ரஜினி பற்றிய விஷயங்களை படமாக்கி கொண்டிருக்கிறோம். அவர் நடித்த பழைய படங்களை பார்த்தோம். உண்மையிலேயே அவர் ஸ்டைல் சூப்பர் ஸ்டைல்.

தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை விரும்புகிறார்கள். இது எந்த நடிகருக்கும் கிடைக்காத தனிச் சிறப்பு.

சிவாஜி படத்தை பார்த்து விட்டுத்தான் லண்டனுக்குத் திரும்புவோம். ரசிகர்கள் ரஜினி மீது வைத்திருக்கும் மதிப்பை பார்க்க வியப்பாக இருக்கிறது என்றனர். அண்ணாநகரில் வைக்கப்பட்டுள்ள 70 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட சிவாஜி பட பேனரையும் இந்தக் குழுவினர் வீடியோவில் ஷூட் செய்தனர்.

முத்து வந்த பிறகு ஜப்பானில் ரஜினி கொடி கட்டிப் பறந்தார். இப்போது சிவாஜி மூலம் இங்கிலாந்திலும் கால் பதிக்கிறார்.

தும்ப சென்னாகிதே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil