»   »  ரஜினியின் அடுத்த ஜோடி யார்?

ரஜினியின் அடுத்த ஜோடி யார்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு திரிஷாவுக்குக் கிடைக்கக் கூடும் என்பதால் திரிஷா, படு பரவசத்தோடு காத்திருக்கிறார்-ரஜினியின் போன் காலுக்காக.

சிவாஜியை சிறப்பாக முடித்து விட்டார் ரஜினி. அடுத்து அவர் நடிக்கப் போகும் படத்தை தயாரிக்கப் போவது யார் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. ஒரு தயாரிப்பாளர் அல்ல 3 தயாரிப்பாளர்களுக்கு தனது படத்தைக் கொடுக்கப் போகிறாராம் ரஜினி.

தன்னை அறிமுகப்படுத்திய கே.பாலச்சந்தரின் கவிதாலயா மற்றும் சத்யா மூவிஸுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கவுள்ளார் ரஜினி. அத்தோடு தற்போது 3வது நபராக பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தையும் சேர்த்துள்ளார் ரஜினி.

ரஜினியை வைத்து பல திருப்பமுனைப் படங்களைக் கொடுத்தவர் பஞ்சு அருணாச்சலம். அவர் தயாரிப்பில், ரஜினி நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் படங்கள்.

சாதாரண நடிகராக இருந்த ரஜினியை சூப்பர் ஸ்டார் நடிகராக்கிய பெருமை பஞ்சுவுக்கும் சேரும். சமீபத்தில் பஞ்சுவின் மகன் சுப்ரமணியம் தயாரிப்பில் உருவாகி வெளி வந்த மாயக்கண்ணாடி பெரும் நஷ்டத்தைக் கொடுத்து விட்டது. கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை பஞ்சுவுக்கு நஷ்டமாம்.

இதை அறிந்த ரஜினி உடனே பஞ்சுவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியுள்ளார். அத்தோடு நில்லாமல் உங்களுக்கு ஒரு படம் செய்து தருகிறேன் என்றும் கூறினாராம். இந்த வார்த்தையைக் கேட்டதும் பஞ்சுவின் மனம் லேசாகிப் போனதாம்.

சொன்னதோடு நில்லாமல் தனது அடுத்த பட தயாரிப்பாளர்கள் பட்டியலில் பஞ்சுவையும் ரஜினி சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினியின் அடுத்த படத்துக்கு தயாரிப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில் ஹீரோயின் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கண்டிப்பாக ஐஸ்வர்யா ராயாக இருக்க முடியாது. ஆனால் திரிஷாவாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஏற்கனவே சிவாஜியில் ரஜினியுடன் ஜோடி போட பிரம்மப் பிரயத்தனம் செய்து வந்தார் திரிஷா. ஆனால் அதிர்ஷ்டம் ஷ்ரியாவைத் தேடிப் போய் விட்டது. இதனால் அப்செட் ஆனார் திரிஷா.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தில் திரிஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது. இதை அறிந்த திரிஷாவும் புதுப் படங்கள் எதையும் ஒத்துக் கொள்ளாமல், ரஜினியிடமிருந்து வரப் போகும் போன் காலுக்காக காத்துள்ளாராம்.

பிள்ளை பிறப்பதற்கு முன்பே பெயரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil