»   »  இமயத்திலிருந்து இறங்கினார் ரஜினி

இமயத்திலிருந்து இறங்கினார் ரஜினி

Subscribe to Oneindia Tamil

இமயமலையில் 38 நாள் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சென்னை திரும்பி விட்டார்.

ஆண்டுதோறும் இமயமலைக்குச் சென்று குறைந்தது ஒரு மாதம் ஆன்மீக பயணம் மேற்கொள்வது ரஜினியின் வழக்கம். இமயத்தில் உள்ள பாபாஜி குகைக்குச் செல்வதும் இந்த பயணத்தின் முக்கிய நோக்கம்.

இமயத்திற்குச் செல்வதன் மூலம் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிர் கிடைக்கிறது, மறு பிறவி எடுப்பது போல உள்ளது என்று பலமுறை ரஜினி கூறியுள்ளார். அது அவரது அனுபவ வார்த்தைகள்.

இமயத்திற்குப் போனவுடன், ரஜினி என்ற அந்தஸ்திலிருந்து சிவாஜி ராவாக மாறி, சாதாரண மனிதனாக மாறி விடுவது ரஜினியின் வழக்கம். இமயத்தின் ஒவ்வொரு மலைப் பகுதியையும் தனது பாதத்தால் அளவிட்டு மனதுக்குள் ஆன்மீக அலைகளை உலவ விட்டு உற்சாகம் பெறுவார் ரஜினி.

இந்த ஆண்டு தனது இமயமலைப் பயணத்தை ஏப்ரல் 30ம் தேதி தொடங்கினார் ரஜினி. முதலில் கோவில்களின் புனித நகராக கருதப்படும் பத்ரிநாத் சென்றார். அங்கு ஒரு வார பயணத்தை முடித்து விட்டு ரிஷிகேஷ், கேதார்நாத் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.

குரு பாபாஜியின் குகைக்குச் சென்ற ரஜினி அங்கு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டாராம். பாபாஜி குகைக்குச் சென்றதோடு தனது இமயமலைப் பயணத்தை நிறைவு செய்தார் ரஜினி.

தனது இமய பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

சிவாஜி படம் ரிலீஸாகும்போது சென்னையில் இருப்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தார் ரஜினி. சொன்னபடி ரிலீஸுக்கு முன்பாகவே சென்னை திரும்பி விட்டார் ரஜினி.

சிவாஜி, கெட், செட், ஜூட்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil