»   »  சிவாஜியை ரசித்த ரஜினி

சிவாஜியை ரசித்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் நடித்த சிவாஜி படத்தை முழுமையாகப் பார்த்து ரசித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

15ம் தேதி சிவாஜி திரைக்கு வருகிறது. படம் தொடர்பான அனைத்து வேலைகளும் முடிந்து விட்டன. இயக்குநர் ஷங்கர் ஹாயாக தனது குடும்பத்துடன் கனடாவுக்குப் போய் விட்டார்.

இந்த நிலையில் இமயமலைக்குப் போயிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஊர் திரும்பி விட்டார். வந்ததும் முதல் வேலையாக ஏவி.எம்.ஸ்டுடியோவுக்குப் பறந்தார்.

சிவாஜி படத்தை முழுமையாகப் பார்க்க வேண்டும் என்று அவர் கூற உடனே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் ஏவி.எம். நிறுவன இணை நிர்வாக இயக்குநர் எம்.எஸ்.குகன்.

படத்தை தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் பார்த்து ரசித்தார் ரஜினி.

படத்தை முழுமையாகப் பார்த்து முடித்து விட்டு வெளியே வந்த ரஜினி எதுவும் பேசவில்லையாம். பென்டாஸ்ட்டிக் என்று மட்டும் சொல்லி விட்டு கிளம்பினாராம்.

2 வருடங்களாக தயாரிப்பில் இருந்து வந்த சிவாஜி,தயாரிப்புச் செலவாக ரூ. 85 கோடியை விழுங்கியுள்ளதாம். இதில் ரஜினிக்கு சம்பளம் மட்டும் ரூ. 25 கோடி என்கிறார்கள்.

அடேங்கப்பப்போய்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil