»   »  பிக் பீயை மிஞ்சிய ரஜினி

பிக் பீயை மிஞ்சிய ரஜினி

Subscribe to Oneindia Tamil

தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய ஆன்லைன் கருத்துக் கணிப்பி்ல் அமிதாப் பச்சனை விட ரஜினிக்கு அதிக செல்வாக்கு இருப்பது தெரிய வந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவி்ன் பாட்ஷா ரஜினி, இந்திய சினிமாவின் சக்கரவர்த்தி அமிதாப் பச்சன் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அமிதாப்பை விட அதிக செல்வாக்குடன் ரஜினி திகழ்வது தெரிய வந்துள்ளது.

வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி சமீபத்தி்ல கருத்துக் கணிப்பை நடத்தியது. இந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்பதுதான் கேள்வி.

மொத்தம் 360 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த கருத்துக் கணிப்பில் ரஜினிக்கு ஆதரவாக 52 சதவீதம் பேரும், அமிதாப்புக்கு ஆதரவாக 48 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பத்திரிக்கையாளர் சோ ராமசாமி, ஸ்கிரீன் பத்திரிக்கை ஆசிரியர் பாவனா செளம்யா, அமிதாப்பச்சன் ரசிகர் மன்ற பிரமுகர் சஞ்சய் படோடியா ஆகியோர் இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டனர்.

விவாதத்தில் கலந்து கொண்டு சோ பேசுகையில்,ரஜினி அற்புதமான நடிகர். அவரை யாருடனும் ஒப்பிட முடியாது. எந்த கேரக்டர் கொடுத்தாலும நடிக்கக் கூடியவர் ரஜினி.

அவரது படங்களுக்கு உலக அளவில் சந்தை மதிப்பு உள்ளது. அவரது செல்வாக்கும் உள்ளூரைத் தாண்டி வெளிநாடுகளிலும் பரவியுள்ளது. அதேசமயம், அமிதாப் பச்சனின் செல்வாக்கையும், திறமையையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil