»   »  ரஜினி கலர் மாறியது எப்படி?

ரஜினி கலர் மாறியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

ஒரு கூடை சன்லைட், ஒரு கூடை மூன்லைட் பாடலில் ரஜினியை வெள்ளைக்கார லுக்கில் கொண்டு வந்தது எப்படி என்ற ரகசியத்தை உடைத்துள்ளார் சிவாஜி படத்தின் கேமராமேன் கே.வி.ஆனந்த்.

உலகெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர்கள், சிவாஜி சிவாஜி என்று ஜெபம் செய்வது போல புளகாங்கிதமடைந்து உச்சரித்துக் கொண்டிருக்கின்றனர்.

படம் முழுக்க ரசிகர்களை மயக்கும் பரவசங்கள் நிறைய. அதில் சுவாரஸ்யமானது, கருப்பு ரஜினி, வெள்ளைக்கார லுக்கில் மாறி நாயகி அசத்தும் காட்சி.

ஷ்ரியா விரும்புவது போல கலராக மாற விரும்பும் ரஜினி பல வேலைகளைச் செய்து பார்க்கிறார். கடுமையாக முயற்சித்து கலராக மாறி ஷ்ரியா முன்பு வந்து நிற்கிறார். அப்போது ஆரம்பமாகிறது ஒரு கூடை சன் லைட் பாட்டு.

இந்தப் பாட்டில் ரஜினி வெள்ளைக்கார ஆசாமியாக மாறி அற்புதமாக காட்சி அளிப்பார். இந்தக் கலர் எப்படி வந்தது என்று பலரும் ஆச்சரியப்பட்ட வண்ணம் உள்ளனர். அதன் ரகசியத்தை இப்போது போட்டு உடைத்திருக்கிறார் கேமராமன் கே.வி.ஆனந்த்.

இதுகுறித்து ஆனந்த் கூறியதாவது

ரஜினியை இப்பாடலில் வெள்ளைக்காரரைப் போல தோன்ற வைத்தால் எப்படி இருக்கும் என்று ஷங்கர் யோசனை கேட்டார். இதையடுத்து அதுதொடர்பாக ஆலோசித்தோம்.

இந்தப் பாடலை ஸ்பெயின் நாட்டில் வைத்து கிட்டத்தட்ட 2 வாரங்கள் படமாக்கினோம். அந்தப் பாடலுக்காக பல நடனக் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டனர். அதில் மிகவும் அழகாக இருந்த ஒரு பெண்ணை அழைத்து அவரை ரஜினி அருகில் நிற்க வைத்து அவரைப் போலவே நடிக்க, ஆட வைத்தோம்.

பின்னர் ரஜினியின் முகம் மற்றும் உடலில் அந்தப் பெண்ணின் நிறத்தை விசேஷ சாப்ட்வேர் மூலம் கிராபிக்ஸ் செய்து புகுத்தினோம். இதனால் ரஜினி வெள்ளைக்காரராக மாறினார்.

இந்தப் பணி மட்டும் கிட்டத்தட்ட 1 வருடம் நடந்தது. இதற்காக கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பொறியாளர்கள் கடுமையாகப் பாடுபட்டனர். இந்தப் பாடல் வெறும் 5 நிமிடம்தான் வருகிறது. ஆனாலும் ஒரு வருடம் இதற்காக பாடுபட்டோம்.

கிராபிக்ஸ் மூலம் வெள்ளைக்காரராக மாறிய ரஜினியை, அவரிடமே போட்டுக் காட்டியபோது அசந்து விட்டார் ஆனந்த்.

அவர் மட்டுமா, ரசிகர்களும்தான் மெய்மறந்து போயிருக்கிறார்கள்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil