»   »  ஷங்கருக்கு ரஜினி தேங்க்ஸ்

ஷங்கருக்கு ரஜினி தேங்க்ஸ்

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கரை அவரது வீடு தேடிச் சென்று சந்தித்து சிவாஜி படத்தைக் கொடுத்ததற்காக பாராட்டி, நன்றி தெரிவித்தார்.

தமிழ் திரையுலகை மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகையே ரஜினி பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விட்டது சிவாஜி. படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் இதுவரை தென்னிந்தியாவில் மட்டுமே கோலோச்சி வந்த ரஜினிக்கு வட இந்தியாவிலும் செமத்தியான வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சிவாஜி ரிலீஸுக்கு முன்னதாக குடும்பத்துடன் கனடாவுக்குப் போய் விட்ட ஷங்கர் சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மாலை ரஜினிகாந்த், ஷங்கர் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தார். சிவாஜியின் வெற்றியை இருவரும் பெரும் மகிழ்ச்சியுடன் பங்கிட்டுக் கொண்டனர்.

சிவாஜி என்ற பெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்தற்காக ஷங்கருக்கு, ரஜினி நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டாராம்.

மறுபடியும் சேருவீங்களா?

ரஜினி ரசிகர்களின் கண் தானம்:

சிவாஜி படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் கண் தான நிகழ்ச்சிக்கு ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

ரஜினிகாந்த் ரசிகர்களுக்கான, விசேஷ இணையதளமான http://www.rajinifans.com/ இந்த கண்தான முகாமை ஏற்பாடு செய்துள்ளது.

மும்பை, வடாலா பகுதியில் உள்ள ஜ்யோத் கண் மருத்துவமனை மற்றும் கண் பாதுகாப்பு மருத்துவமனையுடன் இணைந்து இணையதள கண்தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண் தானம் செய்ய விரும்பும் ரஜினி ரசிகர்கள் மற்றும் பிறர் பின்வரும் இணைய தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

கண்தானம் செய்ய விரும்புவோர் செல்ல வேண்டிய இணையதளம்

http://www.rajinifans.com/

Please Wait while comments are loading...