»   »  ரஜினிக்கு ஆயுர்வேத சிகிச்சை

ரஜினிக்கு ஆயுர்வேத சிகிச்சை

Subscribe to Oneindia Tamil

ஆயுர்வேத சிகிச்சை எடுக்க அடுத்த வாரம் கேரளா செல்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினி தான் நடித்த படம் ரிலீசாகிவிட்டால் ரிலாக்ஸ் செய்ய இமயமலை அல்லது வெளிநாடு சென்று விடுவார். சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவின் குமாரகம் பகுதிக்குச் சென்று அங்கு தங்கியிருந்து ஆயுர்வேத சிகிச்சை எடுத்தார்.

இந்த சிகிச்சை மூலம் பல மடங்கு புத்துணர்ச்சி கிடைத்ததாம். இந் நிலையில் சிவாஜி ரிலீசுக்குப் பின் ஒரு ரவுண்ட் அமெரிக்கா, பெல்ஜியம் என்று போய் வந்த ரஜினி இப்போது பிரான்ஸ் சென்றுள்ளார்.

அங்கிருந்து திரும்பியதும் கேரளா செல்கிறார். தனது மனைவி லதாவுடன் திருவனந்தபுரம் சாந்திகிரியில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்கப் போகிறாராம். அங்கு ரஜினிக்காக நவீன வசதிகளுடன் அறை ஒதுக்கப்பட்டுவிட்டதாம்.

அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

Please Wait while comments are loading...