twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோ .. ஹீரோ ..

    By Staff
    |

    சினிமா கட்டணத்தை உயர்த்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

    சூர்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் புதிய படம் பாய்ஸ். முதல்வனை இந்தியில் எடுத்துஊத்திக் கொண்டதால் ஓராமாய் உட்கார்ந்து இருந்த ஷங்கர் இயக்கப் போகும் இந்தப் படத்துக்கு இசைஏ.ஆர்.ரஹ்மான்.

    இந்தப் படத்தில் 5 புதிய ஹீரோக்களை அறிமுகம் செய்கிறார் ஷங்கர்.

    பாய்ஸ் படத்தின் தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இந் நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த்முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி பேசினார்.

    அவர் கூறுகையில், பாலசந்தர் சார் அறிமுகப்படுத்தியதால் நானும், கமலும் சினிமாவுக்குக் கிடைத்தோம்.

    கடந்த காலங்களில் நிறைய தயாரிப்பாளர்கள், நிறைய நடிகர்கள், நிறைய இயக்குநர்கள் இருந்தார்கள். இப்போதுஅப்படி இல்லை. நிறைய தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் வரவேண்டும்.

    வாழ்க்கையில் ஏழையும் சந்தோஷமாக இல்லை; பணக்காரனும் சந்தோஷமாக இல்லை. புத்திசாலியும்சந்தோஷமாக இல்லை புத்தியில்லாதவனும் சந்தோஷமாக இல்லை. வயதானவர்களும் சந்தோஷமாக இல்லை.இளைஞர்களும் சந்தோஷமாக இல்லை.

    சம்சாரியும் சந்தோஷமாக இல்லை. பிரம்மச்சாரியிடமும் சந்தோஷம் இல்லை. சம்சாரத்திடம் கூட சந்தோஷம்இல்லை.எங்கே சந்தோஷம் இருக்கிறது?

    செய்யும் தொழிலில் தான் சந்தோஷம் இருக்கிறது.செய்கிற தொழலைச் சந்தோஷமாக அனுபவித்து செய்தால்உண்மையான சந்தோஷம் கிடைக்கும்.

    கடுமையாக உழைப்பதில் தான் சந்தோஷம் இருக்கிறது என்று கூறிய ரஜினிகாந்த் யாரும் எதிர்பாராத வகையில்,சினிமா தியேட்டர்களில் கட்டணத்தை உயர்த்த அனுமதி கொடுத்த தமிழக அரசுக்கு திரை உலகம் சார்பில்மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    கடந்த வாரம் தமிழகத்தில் தியேட்டர் டிக்கெட் கட்டணம் கிட்டத்தட்ட 2 மடங்காக உயர்த்தப்பட்டு சினிமாவுக்குச்செல்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் தரப்பட்டது நினைவுகூறத்தக்கது.

    இதை ரஜினி ஆதரித்து இருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X