»   »  ஷாருக் ஆக ரஜினி!

ஷாருக் ஆக ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil


சிவாஜி படத்தின் இந்திப் பதிப்பில் பிக் பி அமிதாப் பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் ஆகியோரைப் போல நடிக்கவுள்ளார் ரஜினி.


ரஜினியின் மெகா ஹிட் படமான சிவாஜி இந்திக்குப் ேபாகிறது. இப்படத்தை ஏவி.எம். நிறுவனமே இந்தியில் டப் செய்கிறது. இதற்காக சில பிரத்யேக காட்சிகளில் ரஜினி காந்த் நடித்துக் கொடுக்கவுள்ளார்.

சிவாஜியில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியில், எம்.ஜிஆர். போலவும், சிவாஜி போலவும், கமல்ஹாசன் போலவும் வேடமிட்டு கலக்கலாக நடித்திருப்பார் ரஜினி. இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், சிரஞ்சீவி போல வேடமிட்டு நடித்திருந்தார்.

தற்ேபாது இந்தியில் போகும் சிவாஜிக்காக தேவ் ஆனந்த், அமிதாப் பச்சன், ஷாருக் கான் போல வேடமிட்டு நடிக்கவுள்ளாராம் ரஜினி. இந்தக் காட்சிகளை சென்னையில் இந்த வாரம் படமாக்கவுள்ளனர்.

தீபாவளிக்கு இந்தி சிவாஜி திரைக்கு வருகிறதாம். ஏவி.எம். நிறுவனமே நேரடியாக ரிலீஸ் செய்கிறதாம்.

Read more about: rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil