»   »  திருந்துங்கப்பா... இளம் ஹீரோக்களுக்கு சொல்லாமல் சொல்லிய சூப்பர்ஸ்டார்!

திருந்துங்கப்பா... இளம் ஹீரோக்களுக்கு சொல்லாமல் சொல்லிய சூப்பர்ஸ்டார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் ஹீரோ பஞ்சம் நிலவுகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய ஹீரோக்களே நம்பிக்கை நட்சத்திரங்களாக தெரிகிறார்கள். ஆனால் அவர்கள் காட்டும் பந்தா இருக்கிறதே... அது அப்பப்பப்பப்பா... அவர்களுக்கெல்லாம் நேற்று முன் தினம் ரிலீஸான கபாலி மேக்கிங்கிலேயே ஒரு

விஷயத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ரஜினி.

Rajini becomes example to young heroes

ரஜினிக்கு கதை முதல் இயக்கம், தயாரிப்பு வரை எல்லாமே அத்துப்படிதான்... ஆனால் ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கினால் முழுக்க முழுக்க இயக்குநரின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடுவார். இன்றைக்கு இருக்கும் ஹீரோக்கள் பலர் கதை கேட்கும்போதே தங்கள் தலையீட்டை தொடங்கி விடுவார்கள்.

படத்தை எடுத்து முடிக்கும்போது இயக்குநருக்கே அது புதிய கதையாக இருக்கும். அந்த அளவுக்கு படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தலையிடும் ஹீரோக்களுக்கு மத்தியில் அத்தனை பெரிய சூப்பர்ஸ்டார் ஆனபிறகும் கூட இயக்குநர் வேலையில் தலையிடாத ரஜினி ஒரு படிப்பினை தான் தந்துள்ளார்.

இதோ இயக்குநர் ரஞ்சித்தே சொல்கிறார்... "ரஜினிசாரைப் பார்த்து 'கபாலி' படத்தோடு முழு ஸ்கிரிப்ட்டையும் சொன்னேன். 'சூப்பர்... சூப்பர்...'னு பாராட்டியவர். 'சரி.. உடனே ஷூட்டிங் கிளம்பிடலாம்' என்று சொன்னார். 'ஸாரி சார் மூணு மாசம் கழிச்சுதான் ஷூட்டிங், அதுக்குள்ளே இன்னும் கொஞ்சம் செதுக்க வேண்டியிருக்கு' என்று மறுத்துச் சொன்னேன். அப்படியே என்னை வெறித்து பார்த்தவர் 'ஓ.கே ஓ.கே உங்க இஷ்டம்' என்று என் கருத்துக்கு மதிப்பு கொடுத்தார். வழக்கமா சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிசாரை இயக்குகிற வாய்ப்பு ஒரு டைரக்டருக்கு கிடைச்சா அவர் என்ன சொன்னாலும் கேட்பார்கள். காமெடியைச் சேர்க்கச் சொன்னால் சேர்ப்பார்கள். ரஜினி சார் பேச்சை மறுக்காமல் உடனே ஷூட்டிங் கிளம்பி இருப்பார்கள். நான் அப்படிச்

செய்யவில்லை 'கபாலி' கதையை வடிவமைப்பதில், திட்டமிடுதலில் நான் பிடிவாதமாக இருந்தேன். என்னிடம் இருந்த அந்த பிடிவாதம்தான் ரஜினிசாருக்கு பிடித்தது.''

இந்த உண்மை அப்படியே மேக்கிங் வீடியோவில் பிரதிபலித்தது. சினிமால எப்படி இருந்தா நீடிச்சு நிக்கலாம்னு இதையெல்லாம் பார்த்து தெரிஞ்சுக்குங்க ஹீரோஸ்!

English summary
Rajini becomes example to young heroes.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil