»   »  தனுஷுக்கு ரஜினி, சிரஞ்சீவி பாராட்டு

தனுஷுக்கு ரஜினி, சிரஞ்சீவி பாராட்டு

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தை அவரது மாமனாரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஆகியோர் பார்த்து வாயாரப் பாராட்டித் தள்ளி விட்டனராம்.

தனுஷ், குத்து ரம்யா (இப்போ திவ்யா) நடித்த பொல்லாதவன் தீபாவளிக்கு ரிலீஸாகியுள்ளது. ஆரம்பத்தில் சுமாராக கிளம்பிய பொல்லாதவன் இப்போது பிக்கப் ஆகி வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது.

ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்பு நடித்த பொல்லாதவன் படத் தலைப்பைக் கொண்டுள்ளதால் இப்படத்தை தனுஷ் ரசிகர்கள் தவிர ரஜினி ரசிகர்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

ரஜினி பட டைட்டிலாக இருந்தாலும், படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டதாம். எங்கேயும் எப்போதும் என்ற பாடலை மட்டும் தான் ரீமிக்ஸ் செய்து கலக்கியுள்ளனர். ரஜினியின் குரலுக்கு அப்படியே பொருந்தும் வண்ணம் பாடும் எஸ்.பி.பி தான் இந்த ரீமிக்ஸ் பாடலையும் பாடியுள்ளார்.

மருமகன் தனுஷ் நடித்துள்ள பொல்லாதவன் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நேற்று போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் பார்த்தார். தனுஷும், படக் குழுவினரும் ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்று படத்தைப் போட்டுக் காட்டினர். பின்னர் ரஜினியுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டனர் (விளம்பரம் செய்ய வசதியா இருக்குமே)

ரஜினி படம் முழுவதையும் ரசித்துப் பார்த்தாராம். படக்குழுவினரையும் பாராட்டினாராம்.

இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோவை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, சென்னையில் வசிக்கும் மூத்த மகள் சுஷ்மிதாவுடன் சேர்ந்து பார்த்தார்.

ஜெயப்ரதாவுக்குச் சொந்தமான தேவிஸ்ரீதேவி பிரிவியூ தியேட்டரில் சிரஞ்சீவி, சென்னையில் வசிக்கும் அவரது மகள் சுஷ்மிதாவுடன் சேர்ந்து படத்தைப் பார்த்தார். மகனும், நடிகருமான ராம் சரண் தேஜாவும் உடன் இருந்தாராம்.

படத்தைப் பார்த்த சிரஞ்சீவி தனுஷின் நடிப்பை காட்சிக்கு காட்சி புகழ்ந்து தள்ளிவிட்டாராம். மேலும், தனது மகனை வைத்து இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யவும் சிரஞ்சீவி தீர்மானித்துள்ளாராம்.

இந்த புகழாரத்தை அவருக்கு அருகில் அமர்ந்து கேட்க நாயகன் தனுஷூக்குத்தான் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அவர் யாரடி நீ மோகினி படப்பிடிப்பிற்காக திருநெல்வேலிக்கு சென்று விட்டாராம்.

படத்தை பார்த்து முடித்தவுடன் தனுஷூக்கு போன் செய்த சிரஞ்சீவி, அவரை பாராட்டி தள்ளிவிட்டாராம். பொல்லாதவன் படத்தின் இயக்குநர் வெற்றிமாறன், படத்தில் பணிபுரிந்த அனைத்து டெக்னீஷியன்கள் உட்பட அனைவரையும் புகழ்ந்தாராம் சிரஞ்சீவி.

மெகா ஸ்டாரின் இந்தப் அந்த பாராட்டே படம் வெற்றி அடைந்ததற்கு முழு சாட்சி என பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி சந்தோஷப்படுகிறாராம் தனுஷ்.

மகள் ஸ்ரீஜா வீட்டை விட்டு ஓடிப்போனதிலிருந்து பெரும் கவலையிலிருந்த சிரஞ்சீவியை தனது பொல்லாதவன் படம் மூலம் அவரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய தனுஷூக்கு ஒரு சபாஷ் போடலாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil