»   »  ஒரே சூரியன் ஒரே சந்திரன்.... ஒரே சூப்பர்ஸ்டார் ட்விட்டரில் ரஜினியைக் கொண்டாடும் ரசிகர்கள்

ஒரே சூரியன் ஒரே சந்திரன்.... ஒரே சூப்பர்ஸ்டார் ட்விட்டரில் ரஜினியைக் கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், ரஜினி நடிக்க வந்து இன்றுடன் 40 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. தற்போது இதனை ட்விட்டரில் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

ட்விட்டர் மூலம் இதனைக் கொண்டாடும் ரசிகர்கள் இந்திய அளவில் #40yearsofsuperstarrajinikanth இந்த ஹெஷ்டேக்கை ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து குவியும் ட்வீட்டுகளால் ட்விட்டர் பக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

தமிழ் சினிமா மட்டுமல்லாது ஆசிய சினிமாவிலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஒரு நடிகராக திகழும் ரஜினிகாந்த், இன்றும் பல நடிகர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.

சூப்பர்ஸ்டாரின் 40 வருட திரைவாழ்க்கையில் தங்களைக் கவர்ந்த விஷயம் என்று ரசிகர்கள் ஒரு சில தகவல்களை கோடிட்டுக் காட்டியுள்ளனர். அவற்றில் இருந்து ஒருசிலவற்றை நாம் இங்கு காணலாம்.

நடிகன் ஆயிரம் பேர்

"இங்கு நடிகன் என்ற பெயரை வாங்க ஆயிரம் பேர் இருக்கின்றனர், ஆனால் எல்லோரிடமும் நல்லவன் என்று பெயர் வாங்க உங்களால் மட்டுமே முடியும்" ரசிகர் ரஜினிகாந்தின் பாராட்டு.

பிடித்த பன்ச் டயலாக்

"பணம் அளவா இருந்தா அது நம்மள பாத்துக்கும் அதிகமா இருந்தா அத நாம பாத்துக்கணும்"தலைவரின் பன்ச் டயலாக்கில் என்னைக் கவர்ந்த பன்ச் டைகர் டைசன்.

பஞ்சிற்கே பவர் கொடுத்தவர்

"பன்ச் டயலாக் எவ்வளவு பவரா இருந்தாலும் அந்த டயலாக்கிற்கே பவர் கொடுக்க எங்கள் தலைவரால் தான் முடியும்" பாசக்காரபையன்.

பாராட்ட வார்த்தைகள் இல்லை

"என்னவென்று உங்களை பாராட்டிப் பேசுவது எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் உறுதி எப்போதும் ரசிகர்கள் உள்ளத்தில் நீங்கள் இருப்பீர்கள்" என்று சான்வேல் கூறியிருக்கிறார்.

கெட்ட பையன் சார் இந்த காளி

"ரெண்டு கையும் ரெண்டு காலும் போனா கூட பொழச்சுக்குவான் சார் இந்த காளி கெட்ட பையன் சார்" என்று முள்ளும் மலரும் படத்தின் புகழ்பெற்ற வசனத்தை நினைவு கூர்ந்திருக்கிறார் ஸ்ரீ.

நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்

"என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு நட்பைக் கூட கற்பைப் போல எண்ணுவேன்" தளபதி படத்தில் வரும் பாடலின் வரிகளை நினைவு கூர்ந்திருக்கிறார் ஸ்ரீஸ்ரீதர்.

ஒரு சூரியன் ஒரு சந்திரன்

"ஒரு சூரியன் ஒரு சந்திரன் அதே போன்று ஒரே சூப்பர்ஸ்டார் தான்" என்று கூறியிருக்கிறார் லோகேஷ் குமரன்.

பெயரைக் கேட்டாலே

தலைவர் " பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல" என்று அவரின் புகழ் பெற்ற வசனத்தை வைத்தே அவரைப் புகழ்ந்திருக்கிறார் அருண்நாத்.

ஆண்டவனே நம்ம பக்கம்

படையப்பா படத்தில் "ஆட்சியே அவங்க பக்கம் என்று ரமேஷ் கண்ணா கூற பதிலுக்கு போடா அந்த ஆண்டவனே நம்ம பக்கம்" என்று ரஜினி கூறுவார் அதனை தனக்குப் பிடித்த வசனமாக பதிவு செய்திருக்கிறார் கிருபாகரன்.

கையில் கொஞ்சம் காசு இருந்தால்

"கையில் கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன் கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அதுதான் உனக்கு எஜமானன்" முத்து படத்தின் புகழ் பெற்ற பாடல் வரிகளை நினைவு கூர்ந்திருக்கிறார் கருப்புசாமி.

தொடர்ந்து ஏராளமான ட்வீட்டுகள் குவிந்து இந்திய அளவில் ட்ரெண்டடித்துக் கொண்டிருக்கின்றது #40YearsOfSuperstarRajinikanth ஹெஷ்டேக், வருடங்கள் 40 வெற்றிகரமாக கடந்த சூப்பர் ஸ்டாரை தட்ஸ்தமிழ் சார்பாக நாமும் வாழ்த்துவோம்...வாழ்த்துக்கள் ரஜினி சார்.

English summary
Rajini Completed 40 Years in Film Industry - Twitter Comments.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil