கோச்சடையான் இந்திக்கு டப்பிங் பேசிய ரஜினி!
'சம்போ மஹா...தே..வ்....' - கோச்சடையான் இந்தி ட்ரைலரில் கம்பீரமாக ஒலிக்கும் இந்தக் குரல்.. சாட்சாத் சூப்பர் ஸ்டாருடையதுதான்.
ஆனால் பலரும் இதனை நம்பாமல், ரஜினிக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பதாக செய்தி பரப்பி வந்தனர். இப்போது இந்தியில் டப்பிங் பேசியது ரஜினிதான் என அஃபிஷியலாக அறிவித்துள்ளனர்.
ரஜினி தன் முதல் படமான அந்தாகானூனிலிருந்து, இந்தியில் கடைசியாகத் தோன்றிய ரா ஒன் வரை சொந்தக் குரலில்தான் பேசியுள்ளார்.

பொதுவாக தன் படங்கள் வேறு மொழியில் டப்பிங் செய்யப்பட்டால் அதற்கு குரல் தரமாட்டார் ரஜினி. இந்த முறை கோச்சடையான் விதிவிலக்கு.
ஆரம்பத்திலேயே கோச்சடையான் இந்தி பதிப்புக்கும் ரஜினிதான் குரல் கொடுக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது நினைவிருக்கலாம்.
மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற பாடலின் இந்திப் பதிப்பில் இடம்பெறும் வரிகளையும் ரஜினியே தன் சொந்தக் குரலில் உச்சரித்துள்ளார்.
இந்தப் படத்துக்கான டப்பிங் பணிகளை சமீபத்தில்தான் முடித்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கோச்சடையான் போஜ்பூரி மொழியிலும் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு யு சான்று வழங்கியுள்ளது சென்சார் குழு.


Click it and Unblock the Notifications











