»   »  கோடை ஓய்வுக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்!

கோடை ஓய்வுக்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறையை ஓய்வில் கழிப்பதற்காக குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

ரஜினி நடிப்பில் இப்போது கபாலி படம் முடிந்துள்ளது. வரும் ஜூலை முதல் வாரம் படம் வெளியாகவிருக்கிறது.

Rajini flies to US with family

ரஜினி நடித்து வரும் இன்னொரு படம் 2.ஓ. இந்தப் படத்தை ஷங்கர் இயக்குகிறார். இருகட்டப் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கோடை விடுமுறையைக் கழிக்க ரஜினியும் குடும்பத்தினரும் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு இரு வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு, சென்னை திரும்பும் ரஜினி, கபாலி இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். அதன் பிறகு மீண்டும் 2.ஓ படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

English summary
Rajinikanth has flew to the US to spend his summer with family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil