»   »  நரேனுக்கு ரஜினி கொடுத்த டாலர்

நரேனுக்கு ரஜினி கொடுத்த டாலர்

Subscribe to Oneindia Tamil

புது மாப்பிள்ளையான கேரளத்தைச் சேர்ந்த நரேன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆசி பெற்றார். அவரை ஆசிர்வதித்த ரஜினி, சாய்பாபா டாலர் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தார்.

சித்திரம் பேசுதடி நாயகன் நரேனுக்கும், அவர் மணக்கவிருக்கும் மஞ்சுவுக்கும் ஆகஸ்ட் 26ம் தேதி கல்யாணம் நடைபெறவுள்ளது. இது ஒரு காதல் பிளஸ் அரேஞ்ட் கல்யாணமாகும்.

நரேனும், மஞ்சுவும் சில காலமாக காதலித்து வந்தனர். இந்தக் காதலை முதலில் நரேன் மறைத்தார், மறுத்தார். பின்னர் காதல், கல்யாணத்தில் முடிவடைவது உறுதியானதைத் தொடர்ந்து எஸ், மஞ்சுதான் எனது மனைவி என்று ஒத்துக் கொண்டார்.

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்தது. இதையடுத்து கோழிக்கோட்டில் வருகிற 26ம் தேதி கல்யாணம் நடைபெறவுள்ளது. அன்று காலை 10.30 மணிக்கு கல்யாணம் நடைபெறுகிறது.

கல்யாணத்திற்குப் பிறகு செப்டம்பர் 1ம் தேதி சென்னையில், உள்ள ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு நரேன் ஏற்பாடு செய்துள்ளார். திருமண ஏற்பாடுகளை நரேன் மற்றும் மஞ்சுவின் பெற்றோர் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நரேன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து தனது திருமண அழைப்பிதழைக் கொடுத்தார். அப்போது நரேனை ரஜினிகாந்த் ஆசிர்வதித்து சாய்பாபா டாலர் ஒன்றை அன்பளிப்பாக கொடுத்தார்.

ரஜினியின் பரிசானால் இன்ப அதிர்ச்சி அடைந்த நரேன், அந்த டாலரை மிக பத்திரமாக போற்றிப் பாதுகாக்கப் போவதாக தனக்கு நெருங்கியவர்களிடம் கூறினாராம்.

Please Wait while comments are loading...