»   »  'அவர்' இல்லாம நடிக்க வர மாட்டேங்குது... புலம்பும் பாபி சிம்ஹா

'அவர்' இல்லாம நடிக்க வர மாட்டேங்குது... புலம்பும் பாபி சிம்ஹா

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாபியை சுற்றிக்கொண்டே இருக்கும் பிரச்னை ரஜினிதான். ஆமாம்... இப்போது வெளியான பாம்பு சட்டை வரை ரஜினியை இமிடேட் செய்கிறார் பாபி சிம்ஹா என்றே விமர்சனங்கள் வருகின்றன. கோ2 விலும் இதே விமர்சனம் தான் வந்தது.

பாபி சிம்ஹாவுக்கு நெருக்கமானவர்கள் பாபியிடம் நேரடியாகவே இதுபற்றி கேட்டிருக்கிறார்கள். 'எனக்கும் புரியுது. ஆனா நான் ரஜினி சாரைப் பார்த்தே வளர்ந்தவன். அதனால ஆட்டோமேட்டிக்கா வந்தர்றாரு. அவர் இல்லாம என்னால நடிக்க வர மாட்டேங்குது' என்று புலம்பியிருக்கிறார்.

Rajini impact on Vijay Sethupathy and Bobby Simha

இதே பிரச்னை தான் விஜய் சேதுபதிக்கும். றெக்க படத்தில் ஒரு பன்ச் டயலாக் பேச ஒரு மணி நேரத்துக்கும் மேல் எடுத்திருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் காரணம் கேட்டபோது 'பன்ச் பேசினாலே ரஜினி சார் மாடுலேஷன் வந்துடுது. மாத்திக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்' என்று சொன்னாராம்.

இன்னும் எத்தனை தலைமுறை வந்தாலும் ஸ்டைலுக்கு, பன்ச்சுக்கும் ரஜினியைத் தான் காப்பி அடித்தாக வேண்டும்.

English summary
Actor Bobby Simha and Vijay Sethupathi are trying to avoid imitating Rajini mannerism in movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil