»   »  பிரபு 60: ரஜினியை அடுத்து அன்னை இல்லம் விரைந்த கமல்

பிரபு 60: ரஜினியை அடுத்து அன்னை இல்லம் விரைந்த கமல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 60வது பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் பிரபுவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

இளைய திலகம் பிரபு ஞாயிற்றுக்கிழமை தனது 60வது பிறந்தநாளை அன்னை இல்லத்தில் குடும்பத்தாருடன் கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

Rajini, Kamal wish B'day Prabhu in person

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அன்னை இல்லத்திற்கு சென்று பிரபுவை வாழ்த்தினார். அதன் பிறகு உலக நாயகன் கமல் ஹாஸனும் பிரபுவின் வீட்டிற்கு சென்று அவரை வாழ்த்தினார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மனம் கவர்ந்தவர் கமல். கமலும், பிரபும் சேர்ந்து வெற்றி விழா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.

ரஜினியும், கமலும் பிரபுவை தங்களின் உடன் பிறவா சகோதரராக கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Rajinikanth, Kamal Haasan too visited Annai Illam to wish actor Prabhu who turned 60 on sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil