»   »  'தல' போல வருமா... அஜித் வழியைப் பின்பற்ற ஆசைப்படும் சிவகார்த்திக்கேயன்

'தல' போல வருமா... அஜித் வழியைப் பின்பற்ற ஆசைப்படும் சிவகார்த்திக்கேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜித் ஒரு சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி ஓர் ஆளுமையாக அவரது தன்னம்பிக்கையைப் பின்பற்ற வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

பொன்.ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட வசூலை முதல் 4 நாட்களிலேயே ரஜினி முருகன் தாண்டி விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திக்கேயன் அஜித்தை சந்தித்தது குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மறக்க முடியாத அனுபவம்...

மறக்க முடியாத அனுபவம்...

அது ஒரு மறக்க முடியாத அனுபவம். அஜித் சாரை பார்ப்பதற்கு போய் உட்கார்ந்திருந்தேன். பூஜையில் இருக்கிறார், உட்காருங்கள் என்றார்கள். அப்போதே எனக்கு பதற்றமாக இருந்தது.

தன்னடக்கம்...

தன்னடக்கம்...

அஜித் சார் பேச ஆரம்பித்தவுடன், வெளியில் அவ்வளவு கொண்டாடுகிறார்களே, அதை அவர் தனக்குள் எடுத்துக் கொள்ளவே இல்லை என்பது தெரிந்தது. இன்றைக்கு அஜித் சார் என்றால் ஒரு 10 நிமிடத்துக்கு கை தட்டல்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

சுயவிளம்பரம்...

சுயவிளம்பரம்...

அஜித் சாருடனான சந்திப்பு ஒரு 4 மணி நேரம் போனது. அவர் அவ்வளவு எதார்த்தமாக பேசினார். இதை நான் வேறு யாரிடமும் சொல்லவே இல்லை. ஏனென்றால், அதைச் சொல்லி நாம் விளம்பரமாக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன்.

அட்வைஸ்...

அட்வைஸ்...

அவரை நான் சந்தித்து ஒன்றரை வருடம் ஆகிறது. அவர் எனக்கு நிறைய ஆலோசனைகள் சொல்லவில்லை, அவருடைய வாழ்க்கையில் நடந்ததைத் தான் சொன்னார். அதை எப்படியாவது கடைப்பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்.

தன்னம்பிக்கை...

தன்னம்பிக்கை...

அஜித் சாரிடம் உள்ள தன்னம்பிக்கையைத் தான் நான் பின்பற்ற வேண்டும் என நினைக்கிறேன். ஆலுமா டோலுமா பாடலின் போது அடிபட்டபோதும் கூட, பாடலை முடித்துக் கொடுத்துவிட்டு தான் சென்றிருக்கிறார்.

அனைவருக்கும் வேண்டும்...

அனைவருக்கும் வேண்டும்...

அவருக்கு நிறைய அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சண்டைக்காட்சிகளில் நடிக்கிறார். அந்த தன்னம்பிக்கை சினிமாத்துறையில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் வேண்டும் என நினைக்கிறேன்.

அஜித்தின் ஆளுமை...

அஜித்தின் ஆளுமை...

அஜித் சார் ஒரு சினிமா நடிகர் என்பதை எல்லாம் தாண்டி ஓர் ஆளுமையாக அவரது தன்னம்பிக்கை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

English summary
During a promotional interview of "Rajini Murugan", Sivakarthikeyan recalled his meeting with Ajith and said one should learn to be self-confident from Thala. The meeting remains an unforgettable experience that lasted for four hours, said the actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil