அட நம்ம தலைவரா இது...திடீரென வைரலாகும் ரஜினியின் இளமை கால அன்சீன் ஃபோட்டோ

சென்னை : சூப்பர் ஸ்டார் என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் பெயர் ரஜினிகாந்த் தான். சினிமா நடிகர்கள், ரசிகர்கள் என பலரின் மனதையும் கவர்ந்தவர் ரஜினி. இவருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது வரை தலைவா என பலரும் கொண்டாடும் நடிகர்.

Rajini playing cricket with Chiranjeevi unseen photos goes viral

இந்திய சினிமா வரலாற்றிலேயே ஸ்டைல் என்றால் ரஜினி என கூறும் அளவிற்கு அழுத்தமான இடத்தை பிடித்துள்ளார் ரஜினி. ரஜினியின் ஸ்டைல், பஞ்ச் டயலாக்குகள், நடிக்கும் விதம் ஆகியவற்றால் கவரப்படாதவர்களே இல்லை என்று சொல்லலாம்.

சமீபத்தில் ரஜினி நடித்து முடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. இப்போதே அவரின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்நிலையில் ரஜினி தனது இளம் வயதில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் கிரிக்கெட் விளையாடி ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

இளம் வயதில், கோலிவுட்டில் டாப் நடிகராக ஆவதற்கு முன் எடுக்கப்பட்ட ஃபோட்டோ என கூறப்படுகிறது. ரஜினியும், சிரஞ்சீவியும் கைகோர்த்தபடி ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக கிரிக்கெட் விளையாடிய போது எடுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடந்த போது அதில் கலந்து கொண்டு இந்த நடிகர்கள் விளையாடி ஃபோட்டோக்கள் அவர்களின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதுவரை வெளிவராத ரஜினியின் துடிப்பான இளமை கால ஃபோட்டோவை அதிக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். ஐதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட இந்த ஃபோட்டோவை யார் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார்கள் என தெரியவில்லை. இது எப்போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ என்றும் தெரியவில்லை.

இப்போது வரை ரஜினி பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். ரிலீசுக்காக காத்திருக்கும் அவரின் அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

அதே சமயம் ரஜினியின் அடுத்த படத்தையும் டைரக்டர் சிறுத்தை சிவா தான் இயக்க போவதாக மற்றொரு தகவலும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமியும் ரஜினியிடம் ஒரு கதை சொல்லி ஓகே வாங்கி இருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

தலைவர் 169 படத்தை தயாரிக்க போவது யார் என முடிவாகததால் தான், டைரக்டரை ஓகே பண்ணாமல் ரஜினி குழப்பத்தில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. தீபாவளி நாளில் அண்ணாத்த ரிலீசானதும், ரஜினியின் பிறந்தநாளில் தலைவர் 169 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X