twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புகைப் பழக்கத்தைக் கைவிட்ட ரசிகர்களை நேரில் பாராட்டிய ரஜினி!

    By Shankar
    |

    சென்னை: புத்தாண்டையொட்டி புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்ட ரசிகர்களையும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களையும் ரஜினி சந்தித்து வாழ்த்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

    கடந்த மாதம் 12-ந்தேதி தனது பிறந்த நாளையொட்டி ரசிகர்களை ரஜினி சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, "புகைப் பிடிக்கும் பழக்கம் இருந்ததால் தனது உடல் நலம் பாதித்தது என்றும், சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ள ரசிகர்கள் அதனை கைவிட வேண்டும்," என்றும் கேட்டுக் கொண்டார்.

    இதைத் தொடர்ந்து புகைப் பழக்கத்தை பலரும் கைவிட்டனர் இதையடுத்து ஏராளமான ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட்டனர்.

    Rajini

    சைதாப்பேட்டையில் சைதை ரவி தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பாக்கெட்டுகளை எரித்தனர். பொன்னேரி பகுதியில் பொன்னேரி சேகர் தலைமையில் ரசிகர்கள் சிகரெட் பழக்கத்தை கைவிட வற்புறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினார்கள்.

    இந்த நிலையில் பிறந்த நாள் விழாவை சிறப்பாக நடத்திய ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார் ரஜினி. அப்போது ரஜினியிடம் தாங்கள் புகைப் பழக்கத்தைக் கைவிட்டது குறித்து தெரிவித்த ரசிகர்கள், ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து கூறினர்.

    ரஜினியிடம் ரசிகர்கள் கூறும்போது, "தினமும் ஆறு பாக்கெட் சிகரெட் பிடிப்போம். உங்கள் அறிவுரையை ஏற்று அப்பழக்கத்தை விட்டுவிட்டோம். இதனால் தினமும் ரூ. 300 வரை மிச்சமாகிறது. குடும்பத்தினர் சந்தோஷப்படுகிறார்கள்",என்றனர்.

    ரொம்ப மகிழ்ச்சி என்று கூறிய ரஜினி, இதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

    பின்னர் 20 ரசிகர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்து பத்திரங்களை ரஜினியிடம் வழங்கினார்கள். அதை அவர் பெற்றுக் கொண்டார்.

    English summary
    Superstar Rajini has met his fans on New Year and praised them for their oath of non smoking.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X