»   »  ரஜினி பரிந்துரையில் மச்சினி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ்

ரஜினி பரிந்துரையில் மச்சினி இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கும் தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யா இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷை நடிக்க வைக்குமாறு சூப்பர் ஸ்டார் தெரிவித்துள்ளாராம்.

கோச்சடையான் படம் மூலம் இயக்குனரானார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. தற்போது அவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்குகிறார்.

படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க விரும்புகிறார் சவுந்தர்யா.

சவுந்தர்யா

சவுந்தர்யா

சவுந்தர்யாவின் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். இந்த படத்தில் நடிக்க விரும்பும் புதுமுகங்கள் தங்களின் புகைப்படங்களை அனுப்பி வைக்குமாறு சவுந்தர்யா ட்விட்டரில் அறிவித்திருந்தார்.

மோகன்லால் மகன்

மோகன்லால் மகன்

சவுந்தர்யா தனது படத்தில் நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவை ஹீரோவாக்க நினைத்தாராம். ஆனால் அவரோ எனக்கு இயக்கத்தில் தான் இஷ்டம், ஹீரோவாக நடித்தாலும் முதலில் மலையாள படத்தில் தான் நடிப்பேன் என்று கூறிவிட்டாராம்.

அகில்

அகில்

தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலாவின் மகன் அகிலை நடிக்க வைக்கவும் யோசித்துள்ளனர். அப்போது தான் சவுந்தர்யா ஹீரோ குறித்து தனது தந்தை ரஜினியிடம் ஆலோசித்துள்ளார்.

தனுஷ்

தனுஷ்

ஏம்மா, படத்தில் நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது. புது முகங்கள் எதற்கு நம்ம மாப்பிள்ளை தனுஷை நடிக்க வைத்தால் நன்றாக இருக்குமே. அவரிடம் பேசிப் பாரு என்று ரஜினி சவுந்தர்யாவிடம் தெரிவித்துள்ளாராம்.

சம்மதம்

சம்மதம்

தனுஷை இயக்க வேண்டும் என்று சவுந்தர்யா தனது ஆசையை முன்பே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனுஷிடம் தனது படத்தில் நடிக்குமாறு சவுந்தர்யா கேட்டவுடன் அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.

English summary
Rajinikanth reportedly recommened Dhanush for Soundarya's upcoming movie Nilavukku En mel Ennadi Kobam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil