»   »  கபாலி... இது ரொம்ப புதுசா இருக்கு தலைவா!

கபாலி... இது ரொம்ப புதுசா இருக்கு தலைவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கமாக ரஜினி படம் என்றாலே ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க செம ஜாலியாக இருக்கும். ச்சும்மா பறந்து பறந்து அடித்து சண்டை போட்டால்தான் அது ரஜினி சண்டை. ஆனால் கபாலியில் நமக்குக் கிடைப்பது வித்தியாசமான சண்டைகள்.

ரொம்ப நிதானமாக காட்சி தருகிறார் ரஜினி. ஆனால் அந்த ஸ்டைல் போகவில்லை. அதேசமயம், சண்டைக் காட்சிகளில் பயங்கர வித்தியாசம்.

வழக்கமாக பறந்து பறந்து சண்டை போடும் ரஜினி இப்படத்தில் நிதானமாக அடிக்கிறார், நிறுத்தி அடிக்கிறார். அசராமல் அடிக்கிறார்.

Rajini's different fight in Kabali

துப்பாக்கியை எடுத்துச் சுடுவது, கத்தியை எடுத்து குத்துவது என்று வழக்கமான விஷயங்கள் இருந்தாலும் இன்னொரு வித்தியாசமான சண்டையைப் பார்க்க முடிகிறது இப்படத்தில்.

அதுதான் காரை ஏற்றிக் கொல்வது. எதிரி பேசப் பேச நிதானமாக கேட்டு விட்டு மகிழ்ச்சி என்று கூறி விட்டு வெளியே வந்த பிறகு சீட் பெல்ட்டை தான் போட்டுக் கொண்டு, அருகில் உள்ள ஜான் விஜய்யை அவர் பார்க்க, அதைப் புரிந்து கொண்டு ஜான் விஜய் சீட் பெல்ட்டைப் போட, பின்னால் உட்கார்ந்திருக்கும் அட்டக்கத்தி தினேஷ், நன்கு கிரிப்பாக உட்கார்ந்து கொள்ள, மின்னல் வேகத்தில் காரை ஏற்றிப் போட்டுத் தள்ளும் காட்சி செம!

இதுவரை பார்க்காத ரஜினி சண்டை இது.

English summary
In Kabali, Rajini has a different fight sequence.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil