Don't Miss!
- News
யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷல்...ரசிகர்கள் கொண்டாடும் ரஜினியின் டாப் 10 படங்கள்
சென்னை : சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த், 1975 ம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். சிறிய ரோலில் நடிக்க துவங்கி, வில்லன், செகண்ட் ஹீரோ, ஹீரோ என படிப்படியாக வளர்ந்து இன்று சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார்.
ரஜினி முதல் முதலில் தெலுங்கு படத்தில் தான் ஹீரோவாக நடித்தார். தமிழில் அவர் ஹீரோவாக நடித்த முதல் படம் பைரவி. அதே வருடம் அவர் நடித்த முள்ளும் மலரும் படம் ரஜினிக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி தந்தது.
கடந்த 46 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 170 க்கும் அதிகமான படங்களில் ரஜினி நடித்துள்ளார். எத்தனை ஸ்டார்களின் படங்கள் வந்தாலும் ரஜினியின் படங்களுக்கு இருக்கும் மவுசு இன்று வரை குறையவில்லை. அப்படி ரஜினியின் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத முத்திரை பதித்த, ரசிகர்கள் கொண்டாடிய டாப் 10 படங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கண்ணைப் பறிக்கும் கட்டழகில் ஜான்வி கபூர் வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள்!

முள்ளும் மலரும்
ஹீரோவாக அறிமுகமான இரண்டாவது படத்திலேயே ஒரு கையை இழந்த பாசமிகு அண்ணனாக நடிப்பால் அனைவரையும் ரஜினி கவர்ந்த படம் மும்ளும் மலரும். ரஜினி படம் என்றாலே பாடல்கள் செம ஹிட் என்பதற்கு பிள்ளையார்சுழி போட்ட படமும் இது தான். இந்த படத்தில் இடம்பெற்ற ராமேன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடல் தற்போது வரை கொண்டாடப்படும் பாடலாக இருந்து வருகிறது.

பதினாறு வயதினிலே
ரஜினி ஹீரோவாக நடிக்கவில்லை என்றாலும், ஹீரோவிற்கு இணையாக பேசப்பட்ட படம் பதினாறு வயதினிலே. இதில் ரஜினி பேசும், இது எப்படி இருக்கு என்ற டயலாக் தற்போது வரை ரஜினி படங்கள் உள்ளிட்ட பல படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்து தாதா ரோலில் நடித்து, ரசிகர்களின் மனங்களை ரஜினி கவர்ந்த படம்.

தில்லு முல்லு
1979 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த கோல்மால் படத்தின் தமிழ் ரீமேக் தான் தில்லு முல்லு படம். வேலைக்காக இரட்டை பிறவி என பொய் சொல்லி நடிக்கும் கேரக்டரில் நடத்திருப்பார் ரஜினி. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கப்பட்ட இந்த படம் என்றென்றும் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது.

ஆறிலிருந்து அறுபது வரை
ஹீரோவாக வளர்ந்து வந்த காலத்திலேயே வயதான கேரக்டரில் நடித்து, தனது கேரக்டரால் அனைவரின் மனதிலும் ஆழமாக ரஜினி இடம்பிடித்த படம் ஆறிலிருந்து அறுபது வரை. இளமை, முதுமை என இரு விதமாக ரஜினி நடிப்பை வெளிப்படுத்திய படம்.

ஜானி
ரஜினியின் ஸ்டைல், நடிப்பிற்கு உதாரணமாக சொல்லப்படும் மற்றொரு படம் ஜானி. ரஜினி - ஸ்ரீதேவி ஜோடியை ரசிகர்கள் கொண்டாடிய படங்களில் ஜானி படமும் ஒன்று. வித்தியாசமான தோற்றத்துடன் ரஜினி ஸ்டைல் காட்டி நடித்த படம்.

தளபதி
ரஜினியின் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் முக்கியமானது தளபதி படம். ஆக்ஷன், அம்மா சென்டிமென்ட், நட்பு, காதல் என அனைத்தும் கலந்த இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி உடன் இணைந்து மிரட்டி இருப்பார் ரஜினி. பாடல், படம், வசனம், இசை என அனைத்தும் சூப்பர் ஹிட்டான படம்.

அண்ணாமலை
நட்பை மரியாதை கொடுக்கும் பால்காரன், நண்பனை எதிர்த்து வாழ்க்கையில் பணக்காரனாக உயரும் தொழிலதிபர், பாசமுள்ள மகன் மற்றும் அப்பாவாக ரஜினி நடித்துள்ள படம் அண்ணாமலை. காதல் காட்சிகள், பாடல்கள், பஞ்ச் டயலாக், ஸ்டைல் என அனைத்து காட்சிகளிலும் ரசிகர்களை விசிலடித்து ரசிக்க வைத்த படம் தான் அண்ணாமலை.

பாட்ஷா
ரஜினியின் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பல மடங்கு உயர்த்திய படம் பாட்ஷா. 1995 ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தாதா, ஆட்டோக்காரன் என இரண்டு ரோல்களையும் மாஸாக செய்திருப்பார் ரஜினி. ரஜினிக்காகவே பஞ்ச் டயலாக்குகள் எழுதப்பட்ட படங்களில் முக்கியமான படம்.

முத்து
ரஜினியின் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட் ஆகியவற்றிற்காகவே ரசிகர்கள் கொண்டாடிய படம் முத்து. இந்த படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக்குகள், அவர் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என அப்போது பரபரப்பாக பேசப்பட்ட விஷயங்களுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்திருந்தது.

படையப்பா
சிவாஜி, ரஜினி இருவரும் இணைந்து நடித்திருந்த படம் படையப்பா. சிவாஜிக்கு இணையாக ரஜினி நடித்து பெயர் வாங்கிய படம் படையப்பா. காமெடி, காதல், ஆக்ஷன், மாஸ் என ரஜினி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் இமேஜை பல மடங்கு உயர வைத்த படம் படையப்பா.