»   »  நான் செஞ்ச வேலைக்கு ரஜினி சார் என் மீது மகா கடுப்பாகப் போகிறார்: வாரிசு நடிகர் ட்வீட்

நான் செஞ்ச வேலைக்கு ரஜினி சார் என் மீது மகா கடுப்பாகப் போகிறார்: வாரிசு நடிகர் ட்வீட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி சார் என் மீது மகா கடுப்பாகப் போகிறார் என்று நடிகர் சாந்தணு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து பெரிய பட்டாளமாக கிளம்பிச் சென்று மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தினார்கள் நடிகர் சங்கத்தினர். நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டவே இந்த கலைவிழா.

கலைவிழாவில் சுமார் 350 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

கலாய்

கலாய்

நீங்க இப்படி 350 பேரு மலேசியாவுக்கு போக செய்த செலவை மிச்சப்படுத்தியிருந்தாலே கட்டிடம் கட்டியிருக்கலாமே. எதற்கு அவ்வளவு தூரம் போக வேண்டும் என்று நெட்டிசன்ஸ் விஷால் அன்ட் கோவை விளாசியுள்ளனர்.

ரஜினி

ரஜினி

மலேசியாவில் இருந்து திரும்பி வந்தபோது திரையுலக பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்த இடத்திற்கு சென்று அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

போட்டோ

அண்மையில் திருமணம் செய்து கொண்ட ஆதவ் கண்ணதாசனும் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். புகைப்படம் எடுத்ததற்கு நன்றி சோனு மற்றும் பெரிய வரிசையை துவக்கிவிட்டதற்கு என்று ட்வீட்டினார் ஆதவ்.

கடுப்பு

ஆதவ் கண்ணதாசனின் ட்வீட்டை பார்த்த சாந்தணு அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, புகைப்பட வரிசையை துவக்கிவிட்டதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என் மீது மகா கடுப்பாகப் போகிறார் என்றார்.

English summary
Actor Shanthanu tweeted that, 'I’m sure superstarrajini sir is going have mahaaaaa kaduppu on me for starting that pic que'. Shanthanu clicked a picture of Aadhav Kannadasan with Rajini on the flight and started a picture queue there.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X