»   »  மலேசியாவிலேயே தீபாவளி கொண்டாடிய ரஜினி!

மலேசியாவிலேயே தீபாவளி கொண்டாடிய ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படப்பிடிப்பு மலேசியப் படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. தொடர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு. நடுவில் தீபாவளி. இந்த தீபாவளிக்கு நிச்சயம் சென்னை வந்துவிடுவார் ரஜினிகாந்த் என்று சொல்லப்பட்டது.

சிலர், ரஜினி வந்தே விட்டார் என்று சத்தியம் அடித்தனர். ஆனால் ரஜினி மலேசியாவின் கேரே தீவிலுள்ள அம்வர்டன் கோவ் ஹோட்டலில் தங்கி அமைதியாக தீபாவளியைக் கழித்தார்.


Rajini spent Deepavali Day at Carey Island

தீபாவளி நாளன்று, மாலிக் கார்ப்பொரேஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் அப்துல் மாலிக் தஸ்திகீர் தலைமையில் 35 பேர் சேர்ந்து ரஜினியுடன் தீபாவளி கொண்டாடினர்.


காலை 8.30 மணிக்கு நடந்த சிறப்புப் பிரார்த்தனையில் கபாலி ஷூட்டிங்குக்காகவும், தனது ரசிகர்கள் நலனுக்காகவும் சிறப்புப் பிரார்த்தனை செய்தாராம் ரஜினிகாந்த்.


கேரே தீவில் இன்று படப்பிடிப்பு நிறைவடைகிறது. மீண்டும் கோலாலம்பூர் திரும்புகிது கபாலி குழு.

English summary
Rajinikanth spent the auspicious Deepavali day at the shooting of his 159th movie Kabali in Carey Island, Malaysia.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil