»   »  ஷங்கரின் 'ரோபாவில்' ரஜினி!

ஷங்கரின் 'ரோபாவில்' ரஜினி!

Subscribe to Oneindia Tamil
Rajini
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரோபோ படத்தை ஷங்கர் இயக்கவிருப்பதை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனமும், ஈரோஸ் மல்ட்டி மீடியா நிறுவனமும் உறுதி செய்துள்ளன.

இதுதொடர்பாக இந்த ஐங்கரன் நிறுவனத்தின் கே. கருணாமூர்த்தியும், ஈரோஸ் நிறுவனத்தின் கிஷோர் லுல்லாவும் உறுதி செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது,

இந்தியத் திரையுலகம் இதுவரை கண்டிராத வகையில் பிரமாண்டமாக, மிகுந்த பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த படமாக ரோபோ உருவாகவுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது. இசையுலகில் முடி சூடா மன்னன் ஏ.ஆர்.ரஹ்மான் ரோபோ படத்திற்கு இசையமைக்கிறார்.

வியக்க வைக்கும் தொழில்நுட்ப உத்தியுடன், கலையம்சம் மிக்க படைப்பாக ரோபோவை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். முன்னணி கதாநாயகி, நடிக, நடிகையர் மற்றும் பிற தொழில்நுட்பக் கலைஞர்களை இயக்குநர் ஷங்கர் விரைவில் அறிவிப்பார்.

இந்தித் திரையுலகின் முன்னணி நிறுவனமான ஈரோஸ் மல்ட்டி மீடியா ஏற்கனவே தேவதாஸ், முன்னாபாய் எம்பிபிஎஸ், ஓம் சாந்தி ஓம், பார்ட்னர் போன்ற பிரமாண்ட படங்களை உலகம் முழுவதும் திரையிட்டுள்ளது.

திரைப்படம், ஸ்டுடியோ, டிவி நிகழ்ச்சிகள் ஹோம் என்டர்டெய்ன்மென்ட், இசை ஆல்பம் மற்றும் திரையரங்குகளை பராமரிப்பதிலும் முத்திரை பதித்துள்ளது.

ஷாருக்கான், ஹ்ருத்திக் ரோஷன் ஆகிய முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதுடன், மேலும் எழுபது இந்திப் படங்களை தற்போது தயாரித்து வருகிறது.

வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களை திரையிடுவதில் முத்திரை பதித்த முன்னண நிறுவனமான ஐங்கரன் இன்டர்நேஷனல் இதுவரை 1,500 படங்களுக்கு விநியோக உரிமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகம் முழுவதும் சிவாஜி, படையப்பா, சந்திரமுகி, முதல்வன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ், போக்கிரி, கில்லி, சிவகாசி, காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கன்னத்தில் முத்தமிட்டால், பில்லா 2007 போன்ற பல வெற்றிப் படங்களை உலகெங்கும் வெளியிட்ட நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil