»   »  தனது "வில்லனுக்கு" டிவிட்டரில் ‘வாழ்த்துக்கள்’ சொன்ன ரஜினி!

தனது "வில்லனுக்கு" டிவிட்டரில் ‘வாழ்த்துக்கள்’ சொன்ன ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் 2.0 படத்தில் வில்லனாக நடித்து வரும் அக்‌ஷய்குமாருக்கு நடிகர் ரஜினி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

பல திரையுலகப் பிரபலங்கள் டிவிட்டரில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் நிலையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' என எப்போது பதிவுகளை வெளியிட்டு அசத்தி வருகிறார் ரஜினி.

கடந்த 2014ம் ஆண்டு மே மாதம் டிவிட்டரில் இணைந்த ரஜினி, இதுவரை 31 பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளார்.

பதிவுகள்...

பதிவுகள்...

மிகவும் தேர்வு செய்த பதிவுகளை மட்டுமே அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். ஆனபோதும் தொடர்ந்து அவரது டிவிட்டர் பக்கத்தை ரசிகர்கள் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.

இரங்கல்...

அந்தவகையில், சில தினங்களுக்கு முன் பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மறைவுக்கு அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

வாழ்த்துக்கள்...

இந்நிலையில், நேற்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு அவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், "அன்புள்ள அக்‌ஷய்குமார், ரிலீசாக உள்ள உங்களது புதிய படம் ருஸ்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

ருஸ்டம்...

ருஸ்டம்...

இந்த ருஸ்டம் என்ற இந்திப் படத்தில் கப்பற்படை அதிகாரியாக அக்‌ஷய்குமார் நடித்துள்ளார். டினு சுரேஷ் இயக்கியுள்ள இப்படம் நாளை ரிலீசாக இருக்கிறது. இப்படத்தில் அக்‌ஷய்குமாருக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார்.

வில்லன்...

வில்லன்...

தற்போது அக்‌ஷய்குமார், ரஜினியின் வில்லனாக சங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் எந்திரனின் இரண்டாம் பாகம் ஆகும்.

சாதனை நாயகன்...

சாதனை நாயகன்...

இப்படியாக எப்போதாவது பதிவுகளை வெளியிட்டு வரும் ரஜினி, டிவிட்டரில் இணைந்த அன்றே, அவரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்ந்தனர். இது பெரும் சாதனையாகக் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth who is very choosy when it comes to Twitter updates. He rarely tweets but whenever he does it turns into a news. Similarly, he made his 31st tweet today, 10th of August to wish his 2.0 co-star Akshay Kumar for the release of his upcoming film Rustom.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil