»   »  ஹீரோ .. ஹீரோ ..

ஹீரோ .. ஹீரோ ..

Posted By:
Subscribe to Oneindia Tamil

நதிகளை இணைப்பது தொடர்பாக மக்கள் இயக்கம் ஆரம்பிக்கத் தேவையில்லை, அதற்கு நான் தலைமை தாங்கவும் மாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த்பல்டி அடித்தார்.

சில மாதங்களுக்கு முன்பு காவிரிப் பிரச்சினைக்காக திரையுலகமே ஒன்று திரண்டு நெய்வேலியில் மாபெரும்பேரணி நடத்தியத. ஆனால் ரஜினி மட்டும் அந்தப் பேரணியில் கலந்து கொள்ளவில்லை.

அடுத்த நாள் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். ஏராளமான அரசியல்வாதிகள் அவரை நேரில் வந்துவாழ்த்தினார்கள். இது ஒரு அரசியல் மேடை போலவே தோன்றுவதாக நடிகர் கமல்ஹாசன் வர்ணித்தார்.

உண்ணாவிரத்திற்குப் பிறகு மாலையில் நடந்த நிருபர்கள் கூட்டத்தில், நதிகைளை இணைப்பது தொடர்பாக மக்கள்இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்தார் ரஜினி. நதிகளை இணைக்க ரூ. 1 கோடி வரை தரத் தயார் என்றுதடாலடியாக அறிவித்தார்.

இதையடுத்து ரஜினி அரசியலில் இறங்கப் போகிறார், அவரது மக்கள் இயக்க துவக்கம் குறித்த அறிவிப்புவிரைவிலேயே வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந் நிலையில், கோவையில் தனது குருவான மறைந்த சச்சிதானந்தா சுவாமியின் 88-வது பிறந்த நாள் விழாவில்ரஜினி கலந்து கொண்டார். கோவை பீளமேடு கொடீஷியா கலையரங்கில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

அதில் ரஜினி பேசுகையில், நதிகளை இணைப்பது தொடர்பான பிரச்சினை இப்போது மத்திய அரசின் கையில்உள்ளது. அவர்கள் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள். எனவே இதற்காக மக்கள் இயக்கம்தொடங்க வேண்டிய அவசியம் இல்லை.

அதுபோன்ற இயக்கத்திற்கு நான் தலைமை தாங்க மாட்டேன். சுப்ரீம் கோர்ட்டே நதிகைள இணைக்க கூறிவிட்டது. நதிகளை இணைக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமரும் கூறியுள்ளார். ஆனால் அது அவ்வளவுஈசியான வேலை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆகாயத்திலிருந்து கங்கை நதியை மண்ணுக்குக் கொண்டு வந்த பகீரத மன்னனின் நினைவாக நதிகள் இணைப்புத்திட்டத்திற்கு பகீரத யோஜனா என்று பெயரிடலாம்.

எனது பாதை ஆன்மீகம்தான். எதற்கும், எந்த அமைப்புக்கும், இயக்கத்திற்கும் நான் தலைமை தாங்க மாட்டேன்.தற்போதைக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை.

வருங்காலம் இளைஞர்களின் கையில்தான் உள்ளது. உண்மை, சத்தியம், நியாயம் ஆகிய மூன்றையும் இளைஞர்கள்கடைப்பிடிக்க வேண்டும் என்றார் ரஜினி.

இதனால் ரஜினியின் நிகழ்ச்சிக்கு வந்த அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் நிலவியஉற்சாகம் நிகழ்ச்சி முடிவடைந்தபோது காணப்படவில்லை.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் நிகழ்ச்சிக்கு வந்த ரஜினி வரும் வழியெல்லாம் காரில்இருந்த வண்ணம் ரசிகர்களைப் பார்த்து கும்பிட்ட வண்ணம் வந்தார்.

அரசியல்வாதிகள் பாணியில் வெள்ளை வேட்டி, வெள்ளை கதர் சட்டை, வெள்ளை செருப்பு, சூட்டிங் நேரம் தவிரமற்ற நேரங்ளில் தாடியோடு இருக்கும் அவர் வழக்கத்துக்கு மாறாக மளமளவென மழிக்கப்பட்ட முகத்துடன்,தலை, மீசைக்கு டை அடித்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால் தாங்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்துவரும் மக்கள் இயக்கம் குறித்து ஏதோ அவர் சொல்லத் தான் போகிறார் என்ற பேச்சு ரசிகர்களிடையே எழுந்தது.

கடைசியில் எல்லாம் புஸ் ஆகிவிட்டது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில்கோவையில் குவிந்த அவரது ரசிகர்கள் உற்சாகம் தொலைத்து ஊர்களை நோக்கித் திரும்பினர்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil