For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சூப்பர் ஸ்டாரின் 38வது திரைஉலகப் பிறந்தநாள்....!

  |

  சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க வந்து இன்றோடு 38 வருடங்கள் நிறைவாகிறது. ஆம், அவரது முதல்படமான அபூர்வ ராகங்கள் இதே நாளில் தான் 1975ம் ஆண்டு ரிலீசானது.

  பெரும்பாலும் தன் திரைஉலக பிறந்தநாளில் தனது முதல் படமான அபூர்வ ராகங்கள் படத்தை டிவியில் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பது சூப்பர்ஸ்டாரின் வழக்கம். இப்படம் நடிக்கத் தொடங்கிய நாளிலிருந்து, படம் பற்றிய சுவாரஸ்யங்களை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வாராம்.

  எங்கோ ஒரு புள்ளியில் வாழ்க்கையை ஆரம்பித்து, யாருமே எண்ணிப்பார்க்க இயலாத அள்விற்கு புகழின் உச்சியில் அமர்ந்திருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் சினிமாவிற்குள் அடி எடுத்து வைத்து ஆலமரமாக வேர் விட்ட கதை சுருக்கமாக உங்களுக்காக...

  நண்பேண்டா...

  நண்பேண்டா...

  கர்நாடகாவில் பஸ் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கியவர் சிவாஜி ராவ் கெய்க்வாட். அவருக்குள் இருந்த நடிப்புத் திறமையைக் கண்டு கொண்ட அவரது நண்பர்கள், அவரை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து மேலும் நடிப்புப் பயிற்சி பெற வைத்தனர்.

  சிவாஜி ராவ் ‘ரஜினி’ ஆன கதை...

  சிவாஜி ராவ் ‘ரஜினி’ ஆன கதை...

  எதேச்சையாகக் கிடைத்த கே பாலச்சந்தரின் அறிமுகத்தால், சினிமா பிரவேசம் சாத்தியமானது. அபூர்வ ராகங்கள் கதாபாத்திரத்திற்காக ஆள் தேடிக் கொண்டிருந்த பாலச்சந்தருக்கு ரஜினி ஞாபகம் வர, ஏற்கனவே தமிழ் சினிமாவில் திலகம் சிவாஜி இருப்பதால், ஒரு ஹோலி பண்டிகை அன்று சிவாஜி ராவ், 'ரஜினிகாந்த்' ஆனார்.

  வெல்கம் ரஜினி...

  வெல்கம் ரஜினி...

  'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 18ம் தேதி வெளியானது. முதல் காட்சியிலேயே பெரிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைவார் ரஜினி. அக்கதவுகள் ரஜினியை திரைஉலகிற்குள் வரவேற்பது போல் அமைந்திருந்தது எதிர்பாராமல் கடவுள் அமைத்துக் கொடுத்தது.

  கோச்சடையான் ஹீரோ...

  கோச்சடையான் ஹீரோ...

  இன்றோடு அந்த படம், வெளியாகி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டது. தற்போது கோச்சடையான் படவேலைகளில் பிசியாக இருக்கிறார் சூப்பர்ஸ்டார்.

  ஸ்டைல், ஸ்டைல்... இது சூப்பர் ஸ்டைல்

  ஸ்டைல், ஸ்டைல்... இது சூப்பர் ஸ்டைல்

  சமூக வலைதளங்களிலும் பிற வழிகளிலும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. வில்லனாக திரை வாழ்வைத் தொடங்கி, இன்று அனைவராலும் சூப்பர்ஸ்டார் என ஏற்றுக்கொள்ளப் பட்ட ஒரே நடிகர் ரஜினி தான்.

  சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..?

  சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா..?

  ஏற்கனவே மம்மூட்டி மலையாளத்தில் தன்னை சூப்பர் ஸ்டார் எனக் கூறாதீர்கள், ரஜினி தான் சூப்பர்ஸ்டார் என்ற வார்த்தைக்குப் பொருத்தமானவர் என புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

  ஒரே ஒரு பாட்ஷா தான்...

  ஒரே ஒரு பாட்ஷா தான்...

  இந்நிலையில் சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் பட புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாரூக் சூப்பர் ஸ்டார் என்றால் உலகிலேயே அது ரஜினி மட்டும் தான் எனக் கூறி ரஜினியின் திரைஉலக வெற்றியை மேலும் பறை சாற்றியுள்ளார்.

  அபூர்வ பிறவி...

  அபூர்வ பிறவி...

  ரஜினி நிஜ வாழ்க்கையிலும் ஒரு அபூர்வமான பிறவி தான். தன் எதிரிக்குகூட எந்த துன்பமும் வரக்கூடது, அவங்க நல்லாயிருக்கனும்னு பிரார்த்தனை செய்கிற பெரிய மனசுக்காரர் என அனைத்து மக்களாலும் புகழப்படக் கூடியவர்.

  சல்யூட் படையப்பா...

  சல்யூட் படையப்பா...

  திரைக்கு வந்து 38 வருடங்கள் ஓடிப் போகியிருந்தாலும், படையப்பாவில் நீலாம்பரி சொல்வாரே அதுபோல், ‘ரஜினியை சிறுவயது குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏன் பிடிக்கிறது தெரியுமா...? வயசானாலும் அவரோட ஸ்டைலும், அழகும் குறையாதது தான்' காரணம்...

  நலம் வாழ...

  நலம் வாழ...

  கிட்டத்தட்ட நடிக்க வந்து நாற்பதாண்டுகளை நிறைவு செய்ய இருக்கும் சூப்பர்ஸ்டார், திரையில் மூன்ரு தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார். தன்னுடன் குழந்தையாக நடித்தவர்களுடன் ஜோடி சேர்ந்த பெருமையும் ரஜினிக்கு உண்டு. அவர் மின்மேலும் ஆரோக்கியத்தோடு வாழவும், மேலும் பல்லாயிரம் படங்களில் நடிக்கவும் அனைவரும் பிராத்திப்போமாக...

  English summary
  Today, the 18th of August, marks the completion of 38 glorious years in the film industry for Superstar Rajinikanth. The social media space is flooding with appreciative messages about the great man and his charisma. Introduced by K.Balachander in the movie Apoorva Ragangal, the Superstar phenomenon has been growing from strength to strength ever since.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more