»   »  பாஸ்போர்ட்டை மறந்துவிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு வந்த ரஜினி

பாஸ்போர்ட்டை மறந்துவிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு வந்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலேசியா செல்ல சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினி பாஸ்போர்ட்டினை மறந்து விட்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கபாலி படத்தின் படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை நிறைவு செய்வதற்காக மலேசியாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் செல்ல வேண்டியிருந்தது.

இதனையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார்.

பாஸ்போர்ட் வீட்டில்:

பாஸ்போர்ட் வீட்டில்:

குடியுரிமைத்துறை அதிகாரிகள் இருக்கும் இடத்துக்கு சென்றபோது தனது பாஸ்போர்ட்டை வீட்டிலேயே மறதியாக வைத்துவிட்டு வந்ததை உணர்ந்த அவர் உடனடியாக தனது குடும்பத்திற்கு தொடர்பு கொண்டு யாரிடமாவது பாஸ்போர்ட்டை கொடுத்து அனுப்பும்படி கூறினார்.

ஒப்படைத்த உதவியாளர்:

ஒப்படைத்த உதவியாளர்:

இதனையடுத்து விரைந்து வந்த அவரது உதவியாளர்களில் ஒருவர் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைத்தார். இதற்கிடையே காலை 11.15 மணியளவில் சென்னையில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டிய மலேசிய விமானம் அரைமணி நேரம் தாமதமாக கிட்டதட்ட 11.45 மணியளவில் புறப்பட்டு சென்றது.

பனிமூட்டத்தால் தாமதம்:

பனிமூட்டத்தால் தாமதம்:

ரஜினிக்காக அந்த விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லவில்லை. அதே விமானம் கோலாலம்பூரில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்தபோது கடுமையான பனிமூட்டமாக இருந்ததால் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

அதிகாரிகள் விளக்கம்:

அதிகாரிகள் விளக்கம்:

அதைத்தொடர்ந்தே இன்று மலேசியாவுக்கும் தாமதமாக புறப்பட்டு சென்றது என மீனம்பாக்கம் விமான நிலைய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth forget his passport in house, and get it by his secretary and flew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil