For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இளைய தலைமுறைக்கு தேடித் தேடி வாய்ப்பளிக்கும் ரஜினி.. அரசியலுக்கு எப்ப?

  |
  Watch Video : Darbar Second Look

  சென்னை: லிங்கா, 2.0 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கவே மாட்டார் என்று பேசப்பட்ட நிலையில் ரஜினி தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, "கார்த்திக் சுப்புராஜ், ரஞ்சித் மாதிரியான இளம் இயக்குநர்கள் அசத்தி வருகிறார்கள். நமக்கு செட் ஆகிற மாதிரி அவர்களிடம் ஏதாவது கதை இருக்க வாய்ப்பு இருக்கா?" என்று கேட்டிருக்கிறார்.

  சமகால தமிழ் சினிமா சூழலுக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக்கொள்ள ரஜினி முன்வந்ததை, அவருக்கு நெருக்கமானவர்கள் வரவேற்றிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே, ரஜினியை வைத்து இயக்குநர் ரஞ்சித் கபாலி மற்றும் காலா என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கினார். பின்பு ஜிகர்தண்டா படம் பார்த்து பிடித்து போக அடுத்த லாட்டரி அடித்தது கார்த்திக் சுப்புராஜிற்கு. விளைவு பேட்ட சூப்பர் ஹிட்.

  இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தர்பார் படத்தில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இப்படத்தினர செகண்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் சக்கை போடு போடுகிறது.

  தல 60: அப்பா மகள் சென்டிமெண்ட்... அஜீத் குமாருக்கு செல்ல மகள் அனிகா தான் தல 60: அப்பா மகள் சென்டிமெண்ட்... அஜீத் குமாருக்கு செல்ல மகள் அனிகா தான்

  சிவாவுடன்

  சிவாவுடன்

  இந்த படத்துக்கு பிறகு கார்த்தியின் சிறுத்தை, அஜித்குமாரை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களை டைரக்டு செய்த சிவாவை சந்தித்து பேசினார். எனவே சிவா இயக்கும் படத்தில் அடுத்து ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. தர்பார் படப் பிடிப்புக்கு புறப்படுவதற்கு முன்னால் இருவரும் சந்தித்து பேசியதும் இதனை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

  மறுபடியும் அவருடனேயே

  மறுபடியும் அவருடனேயே

  இந்த நிலையில் சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்க சிவா தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதனால் ரஜினி படத்தை அவரால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்திலேயே ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முருகதாஸ் சொன்ன கதை பிடித்துபோய் ரஜினிகாந்த் சம்மதம் சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. தர்பார் இரண்டாம் பாகமாக வெளிவரும் என்ற பேச்சு நிலவுகிறது.

  வினோத்

  வினோத்

  இது மட்டும் இன்றி அட்லீ, நேர் கொண்ட பார்வை வினோத் பெயரும் அடிபடுகிறது. சில மாதம் முன்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பின் போது உரையாற்றியிருந்த ரஜினிகாந்த், "போர் வரும் போது பார்க்கலாம். அரசியலுக்கு வருவது உறுதி. வரும் சட்டமன்ற தேர்தலில் நமது படையும் இருக்கும். 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்." என்றெல்லாம் பேசியிருந்தார்.

  ரசிகர்கள் காத்திருப்பு

  ரசிகர்கள் காத்திருப்பு

  இந்தப் பேச்சுக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி, அதில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் மாவட்ட செயலாளர்கள் நியமனம் உள்ளிட்ட பணிகளையும் அவர் முடுக்கிவிட்டார். இதனால் அவர் ‘2.0' , ‘காலா' ஆகிய படங்களுக்குப் பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்துவார், தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

  அவர் ஒரு தொடர் கதை

  அவர் ஒரு தொடர் கதை

  நடிகர் கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து, தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில், இதனால் ரஜினியும் விரைவில் கட்சியை தொடங்குவார் என்றும் கூறப்பட்டது. அதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்தது. இவ்வாறாக ரஜினியின் அரசியல் வருகை ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது.


  English summary
  Super Star Rajinikanth is keep giving chances to Young directors.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X