குழியில் விழுந்த கூலி.. ஜெயிலர் 2வை மலைபோல் நம்பும் ரஜினி.. எப்போ ரிலீஸ்?.. அவரே சொன்ன அப்டேட்
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தின் முதல் பாகம் பெரிய ஹிட் என்பதால் இரண்டாவது பாகமும் அதே ரிசல்ட்டை பெற வேண்டும் என ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள். படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடந்துவரும் சூழலில் படத்தின் ரிலீஸ் குறித்து ரஜினிகாந்த் சூப்பர் அப்டேட் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகியோரின் திரை வாழ்க்கையில் ஜெயிலர் திரைப்படம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் அப்படத்துக்கு முன்பாக ரஜினி நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய படங்களும், நெல்சன் இயக்கிய பீஸ்ட் படமும் படுதோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் அவ்வளவுதான் என்றும், நெல்சனின் கரியர் க்ளோஸ் என்றும் பலரும் பலவிதமாக பேசினார்கள்.
மெகா ப்ளாக் பஸ்டர் ஜெயிலர்: முக்கியமாக நெல்சனுடன் ரஜினி இணைந்தபோது பெரும்பாலானோர் நம்பிக்கை இல்லாமல்தான் இருந்தார்கள். ஆனால் ரஜினியோ முழுக்க முழுக்க நெல்சன் மீது நம்பிக்கை வைத்தார். படம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூலித்திருக்கிறது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது பாகம் உருவாக்குவது என முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளில் இறங்கினார்.

ஜெயிலர் 2 அப்டேட்: கதை, திரைக்கதையை தரமாக உருவாக்கிவிட்டு ஷூட்டிங்கை தொடங்கினார் நெல்சன். ரஜினிகாந்த்தும் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் படப்பிடிப்பில் கலந்துகொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவருடன் யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், பாலகிருஷ்ணா என பலர் நடிக்கிறார்கள். முதல் பாகத்தில் எடுத்த ரிசல்ட்டை இந்தப் பாகத்திலும் எடுத்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் இயக்குநர்.
குழியில் விழுந்த கூலி: இதற்கிடையே ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் கடைசியாக நடித்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படம் வெளியானது. ஆனால் அந்த எதிர்பார்ப்பெல்லாம் தவிடு பொடியாகிவிட்டது. படம் பார்த்த ஒருவருக்குக்கூட கூலி பெரிதாக கனெக்ட் ஆகவில்லை. முக்கியமாக லோகேஷை எல்லாம் ரசிகர்கள் ட்ரோல் செய்து தள்ளிவிட்டார்கள். கூலி ஃப்ளாப் ஆனது ரஜினி ரசிகர்களுக்கு பெரிய சோகம்தான்.
ஜெயிலர் 2 அப்டேட்: கூலி படத்தில் விட்டதை எப்படியாவது ஜெயிலர் 2வில் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் ரஜினி; அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் மும்முரமாக கலந்துகொண்டு வருகிறார். படத்தின் அடுத்த ஷெட்யூல் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடப்பதால் விமானம் மூலம் இன்று அங்கு சென்றார் ரஜினிகாந்த். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெயிலர் 2 திரைப்படம் 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருக்கின்றன" என்றார்.


Click it and Unblock the Notifications











