»   »  "பிரில்லியன்ட்".. டிவிட்டரில் வாழ்த்திய ரஜினி... "மகிழ்ச்சி"யில் ஜோக்கர்!

"பிரில்லியன்ட்".. டிவிட்டரில் வாழ்த்திய ரஜினி... "மகிழ்ச்சி"யில் ஜோக்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜு முருகனின் ஜோக்கர் படத்தை பாராட்டி நடிகர் ரஜினி தனது டிவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Select City
Buy Mera Naam Joker (1970) (U) Tickets

'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிப்பில் ராஜுமுருகன் இயக்கிய படம் 'ஜோக்கர்'. சட்டசபைத் தேர்தல் சமயத்தில் ரிலீசாக வேண்டிய இப்படம் சிலப்பல காரணங்களால் தாமதமாக கடந்த வெள்ளியன்று ரிலீசானது.


லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் என்பது போல் ஜோக்கர் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


திரைப்பிரபலங்களின் பாராட்டு...

திரைப்பிரபலங்களின் பாராட்டு...

ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னணி திரைப்பிரபலங்களும் ஜோக்கர் படத்தைப் பார்த்து விட்டு தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


ரஜினி...

ஏற்கனவே, தனுஷ், ஆர்யா போன்றோர் தங்களது பாராட்டுக்களை ஜோக்கர் படக்குழுவிற்கு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தற்போது நடிகர் ரஜினியும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜோக்கர் படத்தைப் பாராட்டியுள்ளார்.


தேர்ந்தெடுத்த டிவீட்டுகள்...

தேர்ந்தெடுத்த டிவீட்டுகள்...

டிவிட்டரின் இணைந்த நாளன்றே அதிக பாலோயர்களைப் பெற்று சாதனை படைத்தபோதும், டிவீட்டுகளை வெளியிடுவதில் சிக்கனமே காட்டி வருகிறார் ரஜினி. மிகவும் தேர்ந்தெடுத்து டிவீட்டுகளை அவர் வெளியிட்டு வருகிறார்.


விசாரணை...

விசாரணை...

ஏற்கனவே விசாரணைப் படத்தைப் பாராட்டி அவர் தனது டிவிட்டரில் பதிவு வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது ஜோக்கர் படத்தையும் பாராட்டியுள்ளார்.


போனில் வாழ்த்து...

போனில் வாழ்த்து...

டிவிட்டரில் மட்டுமல்லாது ஜோக்கர் படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவுக்கும் அவர் போன் செய்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தாராம். இந்த மகிழ்ச்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரபு. ரஜினியின் இந்தப் பாராட்டால் ஜோக்கர் படக்குழுவினர் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


English summary
Actor Rajinikanth has praised the Tamil political satire film Joker, which has been getting outstanding reception from the audience and critics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil