»   »  முதல்வர் ஜெயலலிதா நலமுடன் வர பிரார்த்திக்கிறேன்!- ரஜினிகாந்த்

முதல்வர் ஜெயலலிதா நலமுடன் வர பிரார்த்திக்கிறேன்!- ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள முதல்வர் ஜெயலலிதா நலம்பெற்று வரப் பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அப்பல்லோவில் கடந்த 72 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரது இதயம் செயலிழந்ததாக செய்திகள் வெளியாகின.

Rajinikanth inquires Jayalalithaa's health condition

இதைத் தொடர்ந்து தமிழகமே பெரும் பரபரப்புக்குள்ளானது. நாடு முழுக்க தலைவர்கள் ஜெயலலிதா நலம் பெற்று வர பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் செய்தியை அறிந்ததும் உடனடியாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் சசிகலா தரப்பிடம் முதல்வரின் உடல் நிலை குறித்து ரஜினிகாந்த் விசாரித்தார். முழு விவரங்களைத் தெரிந்து கொண்ட பிறகு, 'முதல்வர் மீண்டும் நலம்பெற்று வர பிரார்த்திப்பதாக' அவர்களிடம் ரஜினிகாந்த் கூறினார்.

ஏற்கெனவே அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று முதல்வரை நலம் விசாரித்து வந்தார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Rajinikanth has inquired about the health condition of CM Jayalalithaa who is getting treatment after severe heart attack on Sunday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil