என்றுமே நெ.1 இடம்..எவர் கிரீன் ஹீரோ ரஜினிகாந்த்..ஓடும் குதிரையை பார்த்து பிரமிக்கும் பட உலகம்

ஆயிரம் படங்கள் வந்தாலும் ரஜினி படத்தின் சாதனைகள் முன் நிற்க முடியவில்லை. அவ்வப்போது சில படங்கள் சில விஷயங்களில் மட்டுமே முந்துகின்றன.

ராஜா என்றும் ராஜாதான் என்பதுபோல் பக்கத்தில் யாரும் நிற்க முடியாத அளவுக்கு வசூல் சக்ரவத்தியாக ரஜினி இருக்கிறார். பொன்னியின் செல்வன் சாதனைகளை முறியடிக்கும்போது ரஜினியின் பவர் தெரிகிறது.

70 வயதிலும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகராக ரஜினி இருப்பதும், இன்றைய இளம் நடிகர்கள் தொடங்கி, விஜய், அஜித் கூட நெருங்க முடியாமல் இருப்பதும் ஆச்சர்யமே.

 தொட்டதெல்லாம் துலங்கிய நட்சத்திரம் எம்ஜிஆர்

தொட்டதெல்லாம் துலங்கிய நட்சத்திரம் எம்ஜிஆர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் எம்ஜிஆர். தொட்டதெல்லாம் அவருக்கு துலங்கியது. தனது 40 வது வயதில் ஹீரோவாக நடிக்க தொடங்கி 60 வயதுவரை முன்னணி ஹீரோவாக இருந்தவர் எம்ஜிஆர். முதல்வர் பதவிக்கு வந்ததால் நடிப்பை கைவிட்டார். அவர் இருக்கும் வரை அவர்தான் டாப். எம்ஜிஆர் பட உலகை விட்டு விலகிய நேரத்தில் கமல்ஹாசன் ஆரம்ப்பக்கட்ட ஹீரோவாக சில படங்களில் நடித்து வளர்ந்துவந்தார். ரஜினிகாந்த் வில்லனா? ஹீரோவா, ஹீரோவின் நண்பரா என திரிசங்கு நிலையில் இருந்தார்.

 முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போட்ட வில்லன் நடிகர் ரஜினிகாந்த்

முன்னணி ஹீரோக்களுடன் போட்டி போட்ட வில்லன் நடிகர் ரஜினிகாந்த்

சிவாஜி கணேசன், விஜயகுமார், கமல், சிவகுமார், ஜெய்ஷங்கர் என பல ஹீரோக்கள் இருந்தனர். ரஜினிகாந்த் ஹீரோவாக குறுகிய காலத்தில் வளர்ந்தார். 80 களின் மத்திய காலக்கட்டத்தில் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் கொண்டாடும் ஹீரோவாக வளர்ந்திருந்தார். அதற்கு முக்கிய காரணம் நமக்கு அடுத்துவீட்டு இளைஞர் போன்ற தோற்றம், யதார்த்த நடிப்பு அனைத்துக்கும் மேலாக அந்த ஸ்டைல். காந்தமாக தமிழக ரசிகர்களை கட்டிப்போட்டது. வயதானதால் சிவாஜி கணேசன் மவுசு குறைய, ஜெய்ஷங்கர் வில்லன் வேடத்துக்கு நகர ஆரம்பித்தனர்.

 எம்ஜிஆர், சிவாஜிக்கு இல்லாத வாய்ப்புகள் ரஜினிக்கு

எம்ஜிஆர், சிவாஜிக்கு இல்லாத வாய்ப்புகள் ரஜினிக்கு

முன்னணி ஹீரோவாக இருந்த விஜயகுமார் எம்ஜிஆர் பாதி சிவாஜி பாதி கலந்து செய்த கலவை நான் என நடிக்க மாற்றத்தை எதிர்பார்த்த ரசிகர்கள் கமல் ரஜினியை ஏற்க ஆரம்பித்தனர். அதற்கு ஏற்ப எம்ஜிஆர் கைவிட்ட பாத்திரங்களில் தேவர் ஃபிலிம்ஸ் படங்களிலும், சிவாஜி கணேசனுக்கு பின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் பாலாஜி தயாரிப்பிலும் ரஜினி நடிக்க ஆரம்பித்தார். ஒரே நேரத்தில் தேவர் பிலிம்ஸ், சுஜாதா சினி ஆர்ட்ஸ் நிறுவனங்களில் ரஜினி நடித்தார். எம்ஜிஆர் சுஜாதா சினி ஆர்ட்ஸ் படங்களில் நடித்ததில்லை, சிவாஜி தேவர் பிலிம்ஸில் நடித்ததில்லை. ரஜினி சுஜாதா சினி ஆர்ட்ஸுக்காக நடித்த பில்லா வசூலை வாரி குவித்து ரஜினியை சூப்பர் ஸ்டார் ஆக்கியது.

 சீரான வேகம் பின்னர் பாய்ச்சல் வேகம் அதுவும் 60 வயதுக்கு பின்

சீரான வேகம் பின்னர் பாய்ச்சல் வேகம் அதுவும் 60 வயதுக்கு பின்

அதன் பின்னர் ரஜினியின் வளர்ச்சி சீராக உயர்ந்துக்கொண்டே வந்தது, இடையில் பாபா தடைபோட்டாலும் அடுத்த படத்திலேயே சட்டென எழுந்தார் ரஜினி. சந்திரமுகியின் ஹிமாலய வெற்றி அடுத்தடுத்த படங்களான சிவாஜி, எந்திரன் என மிகப்பிரம்மாண்டத்தை நோக்கி ரஜினி நகர்ந்தார். தன்னை ஓடுகிற குதிரை என ரஜினி சொன்னார். அதை நிரூபித்தும் வந்தார். இடையில் நடிப்பதை நிறுத்தலாம் என்று ரஜினி முடிவெடுத்ததை யாரோ மாற்றினார்கள். அவர் முடிவெடுத்தால் அவர் பேச்சை அவரே கேட்க மாட்டார் ஆனால் இம்முறை முடிவை மாற்றிக்கொண்டார். படத்துக்கு படம் இளையவர்களுடன் இணைந்தார்.

 ரஜினி பட சாதனையை அவர் படம்தான் முறியடித்துள்ளது

ரஜினி பட சாதனையை அவர் படம்தான் முறியடித்துள்ளது

அப்படி பா.ரஞ்சித்துடன் இணைந்த படம் தான் கபாலி. எந்திரன் படத்தின் வசூலை கபாலி முறியடித்தது, அதன் வசூலை அதன் பின்னர் எந்த படமும் இதுவரை முறியடிக்கப்படவில்லை, அவர் பட வசூலை அவரது படமேதான் முறியடித்தது. 2.0 படம் வெளியாகி கபாலி பட வசூலை முறியடித்தது. அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான காலா, பேட்ட, தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் ஓடவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சாலிடாக பெறவேண்டியதை பெற்றுக்கொடுக்கிறது. தற்போது ஜெயிலர் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.

 70 வயதிலும் டாப்பில் ரஜினிகாந்த்

70 வயதிலும் டாப்பில் ரஜினிகாந்த்

ஆனாலும் ரஜினியின் சாதனை எப்போது வெளிப்படுகிறது என்றால் ஏதாவது ஒரு படம் வெளியாகி அது முதல் நாள் வசூல், முதல் வார வசூல், 100 கோடி ரூபாய் கிளப், 200 கோடி 300 கோடி ரூபாய் கிளப்பில் இணையும்போது அங்கே ரஜினி படம் முதலில் இருக்கும் அல்லது மொத்தமாக 2,3 இடங்களில் இருக்கும்போது ரஜினி படத்தின் வீச்சு தெரியும். 300 கோடி ரூபாய் கிளப்பில் பொன்னியின் செல்வன் இணைந்தது. வாழ்நாளில் முதன் முறையாக கமலுக்கு 400 கோடிக்கு மேல் வாரிக்கொடுத்த படம் விக்ரம். 300 கோடி ரூபாய் கிளப் படத்தில் 5 படங்கள் உள்ளன. அதில் 3 படங்கள் ரஜினியின் படங்கள், கமலின் விக்ரம் ஒன்று பொன்னியின் செல்வன் ஒன்று. அதுதான் ரஜினி. எம்ஜிஆர் கூட 60 வயது வரைதான் ஹீரோ ரஜினி எனும் குதிரை ரேஸில் முன்னணியில் 70 வது வயதிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X